என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சரின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு

    • தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
    • திருச்சியில் பிரதமரிடம் முதலமைச்சரின் கோரிக்கை மனுவை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதியன்று தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிந்துரையின்படி அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைதொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கஆலோசனை நடத்தினார்.

    பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.

    அப்போது கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில்,"மருத்துவமனையில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் இந்த கோரிக்கை மனுவை திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

    அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151.59 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனை ஆக்காமல் நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கான ரெயில்வே திட்ட்ஙகளுக்கு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும். மேலும், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×