search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manmohan Singh"

    • தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள்.
    • உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

    மாநிலங்களவையில் 33 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து தாங்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காகத் தி.மு.க.வின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள். உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.

    வாழ்வில் புதிய கட்டத்தை நோக்கித் தாங்கள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்திய ஒன்றியத்துக்கும் இந்திய மக்களுக்கும் நீங்கள் ஆற்றிய பெருந்தொண்டினை எண்ணிப் பெருமை கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    தி.மு.கழகம் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் தாங்கள் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழவும், அடுத்து தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் மனநிறைவெய்தவும் விழைகிறேன். தங்களது அறிவாற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிப்பீராக.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர்.
    • முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார்.

    1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாளையுடன் ஓய்வு பெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    கடந்த 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

    மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார். அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர். 

    • மன்மோகன் சிங் ஆறு முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
    • இரண்டு முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநிலங்களவை எம்.பி.க்களில் 68 பேரின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில் முடிவடைகிறது. இதையொட்டி அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பேசினார்.

    அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார். அப்போது "மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாக்கு அளிக்க மாநிலங்களவைக்கு வந்து, ஜனநாயகததின் வலிமைக்கு உதவியாக இருந்தார். மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. நீண்ட காலம் இந்த அவையையும் நாட்டையும் அவர் வழி நடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழி நடத்த வேண்டிக் கொள்கிறேன்.

    ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கது." என்றார்.

    மன்மோகன் சிங் 2014 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்திய பிரதமாக இருந்தார். ஆறுமுறை மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய பிரதமர்கள் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து 10 வருடம் ஆனதாக தகவல்
    • பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

    கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இது காங்கிரஸ்-க்கு பெரிய அடியாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில்இந்திய பிரதமர்கள் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து 10 வருடம் ஆனதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் தகவல் தொடர்பு ஆலோசகர் பன்கஜ் பக்சோரி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் "இந்தியப் பிரதமர் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. 2012ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுடன், 62 திட்டமிடப்படாத கேள்விகளுக்கு அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பதிலளித்திருந்ததாக பதிவிட்டிருந்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்க் பதில் அளித்தும், அவர் அமைதி காத்ததாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்திருந்தன.

    இந்நிலையில் பாஜக பதவியேற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியாவில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது தற்போது பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார்.

    உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்கள்?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சாதி, மத அடிப்படையில், இந்தியாவின் ஜனநாயக கொள்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என பதிலளித்திருந்தார் மோடி. அரசை விமர்சிப்பவர்களை வாய் திறக்காமல் செய்வதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிப்பதாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இச்சம்பவம் அப்போது பேசுபொருளாகி விவாதத்தை ஏற்படுத்தியது.

    உலக நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பது உண்டு. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 117 முறை செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

    • முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார்.
    • இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தது.

    அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தற்போது 90 வயதாகிறது.
    • இவருக்கு அவையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி :

    முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் (வயது 90) மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவருக்கு அவையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் வயது மூப்பு காரணமாக அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். எனவே அவைக்குள் இந்த நாற்காலியை பயன்படுத்துவதற்கு வசதியாக, மன்மோகன் சிங்குக்கு கடைசி வரிசையில் இருக்கை மாற்றப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், திக்விஜய் சிங் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த இருக்கை மாற்ற நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு உள்ளது.

    • இந்தியா-இங்கிலாந்து இணைந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
    • இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

    லண்டன் :

    இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

    இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு இருநாடுகளிலும் கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக மன்மோகன் சிங்குக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த விருது, தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் விரைவில் டெல்லியில் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், "நமது நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் கீழ் இளைஞர்களிடம் இருந்து வரும் அர்த்தமுள்ள இந்த விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் நமது கல்விக் கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகிறது. நமது தேசத்தை நிறுவிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து, சிறந்த தலைவர்களாக மாறினர். பல ஆண்டுகளாக எண்ணற்ற இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    • பொருளாதார நிபுணர் ஆட்சியில் 10வது இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆனது.
    • டீ விற்றவர் ஆட்சியில் 10ல் இருந்து 5வது இடத்தை அடைய 8 ஆண்டுகள் ஆனது.

    குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில். ராஜ்கோட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

    2014 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்கும் முன், 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, ​​புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர் (மன்மோகன் சிங்) நமது பிரதமராக இருந்தார்.

    இந்திய பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. அடுத்த ஆண்டுகளில், அவர்கள் என்ன செய்தாலும், இந்தியப் பொருளாதாரம் பத்தாவது இடத்திற்கு மாறியது. இதன் மூலம் 11வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரம், 10வது இடத்தைப் பெற பத்து ஆண்டுகள் ஆனது.

    2014-ல் நீங்கள் ஒரு சாய்வாலாவுக்கு (டீ விற்பவர்) ஆட்சியைக் கொடுத்தீர்கள். நான் ஒரு பொருளாதார நிபுணர் என்று ஒரு போதும் கூறவில்லை. ஆனால், மக்களின் பலம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியது.

    11வது இடத்தில் இருந்து 10வது இடத்தைப் பிடிக்க பத்து ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (காங்கிரஸ்) ஆட்சியையும், 10வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தை அடைய எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (பாஜக) ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார்.
    • பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (89), காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     
    மன்மோகன் சிங் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
     
    மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மருத்துவமனைக்குச் சென்று மன்மோகன் சிங் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    தொடர்ந்து சோர்வாக இருந்த அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான மருத்துவக் குழு மன்மோகன் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. தொடர் சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்தார்.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல்-சபை எம்.பி. ஆக இருக்கிறார். இதற்காக, தி.மு.க.விடம் இருந்து ஒரு இடத்தை வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
    சென்னை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.

    காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

    எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.

    தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்- சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், தமிழகத்தில் தான் 6 மேல்-சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது, அ.தி.மு.க.வை சேர்ந்த வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.



    தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால், கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவி அக்கட்சிக்கு கிடைக்கிறது. அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
    மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு விமான கட்டணமாக ரூ.443.4 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் இது முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் பயண செலவை விட குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. #AirIndia #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 -ம் ஆண்டு பதவி ஏற்றார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது சர்ச்சையானது.

    பிரதமராக பதவி ஏற்ற ஒரு ஆண்டுக்குள் 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை மட்டும் 20 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக அரசு சார்பில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டது. இதன் பிறகு ஆண்டுதோறும் இதை விட அதிகமான தொகை பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவழிக்கப்பட்டது.

    இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பா.ஜனதா கட்சியினர் நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காக பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என்று விளக்கம் அளித்தனர்.

    ஏர் இந்தியா விமான நிறுவனம் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை சமீபத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அதில் 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 பயணங்கள் சென்றுள்ளார்.

    ஒரே பயணத்தில் ஆறு நாடுகளுக்கு சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது என பல்வேறு பயணங்கள் இதில் அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது என பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது.

    இந்த 44 பயணங்களை தாண்டி சிங்கப்பூர், ஈரான் போன்ற மேலும் ஆறு வெளிநாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். அந்தப் பயணங்களை இந்தியன் ஏர் போர்சுக்குச் சொந்தமான போயிங் 737 பிசினஸ் ஜெட்டில் பயணம் செய்து இருக்கிறார்.


    முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.493 கோடி மத்திய அரசு செலவிடப்பட்டுள்ளது. அவர் 5 ஆண்டுகளில் 38 முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

    மன்மோகன் சிங்கைவிட நிறைய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த மோடி அவரைவிட ரூ.50 கோடி குறைவான செலவில் பயணம் செய்தது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஒரே பயணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்கு சென்றதால் ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது. பிரதமர் தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றிய பேட்டியிலேயே ஒரே டிக்கெட்டில் நிறைய நாடுகள் என்று இதை குறிப்பிட்டு இருக்கிறார். 44 பயணங்களில் 16 பயணங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.

    விரைவில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் செல்ல இருக்கிறார். இந்த ஆட்சி காலத்தில் அவரது கடைசி வெளிநாட்டு பயணமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. #AirIndia #PMModi
    ×