என் மலர்
நீங்கள் தேடியது "செனாப் பாலம்"
- இதன் பொருள் ஜூன் 26, 2013 அன்று, பாரமுல்லா மற்றும் காசிகுண்ட் இடையேயான 135 கி.மீ ரயில் இணைப்பு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
- தொடர்ந்து சுய-பெருமை தேட முயற்சிப்பதால், இந்த உண்மையை தொடர்ந்து மறுக்கிறார்.
செனாப் நதி மீது உலகின் உயரமான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை (USBRL) காங்கிரஸ் ஆட்சியின் தொடர்ச்சிக்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி, தனது இடைவிடாத சுயபிம்ப ஆசையால், அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
இமயமலையின் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக செல்லும், ரூ.43,780 கோடி செலவில் கட்டப்பட்ட 272 கி.மீ நீள ரெயில் இணைப்பான USBRL-ஐ பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷின் அறிக்கையில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மார்ச் 1995 இல் USBRL முன்மொழிவு முதன்முதலில் அனுமதிக்கப்பட்டது. இது மார்ச் 2002 இல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒரு தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 13, 2005 அன்று, ஜம்மு மற்றும் உதம்பூர் இடையேயான 53 கி.மீ ரயில் இணைப்பை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி, ஸ்ரீநகருக்கு வெளியே அனந்த்நாக் மற்றும் மஜோம் இடையேயான 66 கி.மீ ரயில் இணைப்பை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி, ஸ்ரீநகருக்கு வெளியே மஜோம் மற்றும் பாரமுல்லா இடையேயான 31 கி.மீ ரயில் இணைப்பையும் அவர் திறந்து வைத்தார்.
அக்டோபர் 29, 2009 அன்று, மன்மோகன் சிங் அனந்த்நாக் மற்றும் காசிகுண்ட் இடையேயான 18 கி.மீ ரயில் இணைப்பையும், ஜூன் 26, 2013 அன்று காசிகுண்ட் மற்றும் பானிஹால் இடையேயான 11 கி.மீ ரயில் இணைப்பையும் திறந்து வைத்தார்.
இதன் பொருள் ஜூன் 26, 2013 அன்று, பாரமுல்லா மற்றும் காசிகுண்ட் இடையேயான 135 கி.மீ ரயில் இணைப்பு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் பிரதமர் மோடி, தொடர்ந்து சுய-பெருமை தேட முயற்சிப்பதால், இந்த உண்மையை தொடர்ந்து மறுக்கிறார். USBRL போன்ற மிகவும் சவாலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் கட்டத்தில் இந்த உண்மை மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக் காட்டினார்.
- நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரெயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது.
இந்தியாவின் முப்படைகளும் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளும், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்த அதிரடி நிகழ்த்தப்பட்டு சரியாக ஒரு மாதம் நிறைவு பெறும் நிலையில் காஷ்மீரில் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இன்று அங்கு ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னேற்றத்தில் புதிய சகாப்தம் என்ற பெயரில் சுமார் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்கான விழா பத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரிய விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு மத்திய மந்திரிகள் நிதின் ஜெய்ராம் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் ஜிதேந்திரசிங், வி.சோ மண்ணா, ரவ்னீத்சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, துணை முதல்-மந்திரி சுரிந்தர்குமார் சவுத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பிரதமர் மோடி உலகின் மிக உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு பிரமாண்ட ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரெயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் போக்குவரத்து (யு.எஸ்.பி.ஆர்.எல்.) திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 272 கி.மீ தொலைவிலான இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.43,780 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 119 கி.மீ தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, நாட்டின் முதல் கேபிள் ரெயில் பாலம் 473 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அனைத்து கால நிலையிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி.ஆர்.எல். திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே தடையற்ற ரெயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்.
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ள கத்ரா பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
தேசிய நெடுஞ்சாலை-701-ல் ரபியாபாத் முதல் குப்வாரா வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை-444-ல் ரூ.1,952 கோடிக்கும் அதிக மதிப்புடைய ஷோபியன் புறவழிச் சாலை கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை- 44-ல் உள்ள பெமினா சந்திப்பிலும் இரண்டு மேம்பாலத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். கத்ராவில் ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்பில் உருவாக்கப்படும் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி உயர் சிகிச்சை மருத்துவ மையத் துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின்பு, பிரத மர்மோடி முதல் முறையாக காஷ்மீர் வந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வரலாறு காணாத அளவுக்கு செய்யப்பட்டு இருந்தன.
பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெற்ற கத்ரா அரங்கத்தை சுற்றிலும் கண்காணிப்பு பணியில் டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.
- கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உதம்பூர், ஸ்ரீநகர், பாராமுல்லா ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த பாலத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரெயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பின்னர் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
- ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
- ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும்.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அங்கு செல்ல பயணத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதன்படி பிரதமர் மோடி நாளை அங்கு செல்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த பாலத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரெயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பின்னர் பகல் 12 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
- ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது செனாப் பாலம்.
- ஜம்மு காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ரெயில் இணைப்பு மிக முக்கியம்.
புதுடெல்லி:
உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு அமைப்பான ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கிறார் .
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
ஜம்மு காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ரெயில் இணைப்பு முக்கியமாகும்.
மேலும், ஸ்ரீநகரை ஜம்முவில் உள்ள கத்ராவுடன் இணைக்கும் இரு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த செனாப் பாலத்தின் திறப்பு விழா வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- எங்களுடைய பொறியாளர்கள் ஒரு அற்புதத்தை உருவாக்கியிருப்பது பெருமையான தருணம்.
- இது உலகின் 8வது அதிசயமாகும்.
ஜம்மு காஷ்மீரில் கத்ரா-பனிஹால் பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்தில் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும். இந்த உயரம் பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம் என்பது சிறப்பாகும்.
செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் வழியாக ரம்பானில் இருந்து ரியாசிக்கு ரெயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து கொங்கன் ரெயில்வேயின் துணை தலைமை பொறியாளர் சுஜய் குமார் கூறுகையில், "இந்த திட்டம் மிகவும் சவாலானது. இந்த திட்டத்தால் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று கூறினார்.
ரியாசி துணை கமிஷனர் விஷேஷ் மகாஜன் கூறுகையில், "இது நவீன உலகின் பொறியியல் அதிசயம். ரெயில் ரியாசியை அடையும் நாள், மாவட்டத்தையே மாற்றும் நாளாக இருக்கும். இது பெருமைக்குரிய தருணம். எங்களுடைய பொறியாளர்கள் ஒரு அற்புதத்தை உருவாக்கியிருப்பது பெருமையான தருணம்.
இது உலகின் 8வது அதிசயமாகும். இந்த பாலம் காற்றின் வேகம், வலிமை, அற்புதம். பாலத்தை திறக்கும் சரியான தேதி சொல்ல முடியாது, ஆனால் அந்த நாள் விரைவில் வரும் என்று கூறினார்.






