என் மலர்
நீங்கள் தேடியது "Vande Bharat Train"
- இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது.
- மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகி உள்ளது.
இந்த கால அட்டவணைப்படி, இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து காலை 7.20 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயக்கப்பட உள்ளது. ரெயில் இயக்கப்பட்ட பின்னர், நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் நேரங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
- காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12608) வருகிற 23-ந் தேதி வரையும், காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12680) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16054) 23-ந் தேதி அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12679) சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) 23-ந் தேதி சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16053) சென்ட்ரல்-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) வருகிற 23-ந் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
- வரும் ஜனவரி மாதம் 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
சென்னை:
சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது. இதுவரையில், இந்தியா முழுவதும் 92 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரெயில்கள் இருக்கை வசதி கொண்டதாக இருப்பதால் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
எனவே, இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தில், கடந்த ஆண்டு முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணிகள் நடைபெற்றது. பின்னர், ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டுவரப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல, 2-வது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணிகள் முடிந்து தற்போது ஆமதாபாத்தில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் சேவைகளும் வரும் ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதேபோல, வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 8 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
வரும் ஜனவரி மாதம் 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரெயிலின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் மார்ச் மாத இறுதிக்குள் கூடுதலாக 8 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தேவைக்கேற்ப ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணி நடைபெறும். இதேபோல, பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கன்னியாகுமரி வரையில் ஒரு படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வாறு கூறினார்கள்.
- நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பனாரஸ் ரெயில் நிலையத்திலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பனாரஸ்–கஜுராஹோ, லக்னோ–ஷஹாரான்பூர், பிரோஸ்பூர்–டெல்லி மற்றும் எர்ணாகுளம்–பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தபின் பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெயில் புதன்கிழமை தவிர நாள்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். ரெயில் 8.15 மணிக்கு சேலம், 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவைக்கு வரும்.
இதேபோல எர்ணா குளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தை அடையும். 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம் வழியாக ரெயில் பெங்களூரு செல்லும்.
இந்த ரெயிலின் தொடக்க நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் வருகிற 8-ந் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் புதிய வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
- பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
- 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.
கோவை:
தெற்கு ரெயில்வேயில் தற்போது 11 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற விரைவு ரெயில்களை காட்டிலும் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் தென்மேற்கு ரெயில்வே சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. வருகிற 7-ந் தேதி முதல் இதன் சேவை தொடங்குகிறது.
இந்த ரெயிலை சேலம், ஈரோடு, கோவை, திருப்பூரில் நின்று செல்லுமாறு இயக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரியிடம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள்படி இந்த 4 ரெயில்களிலும் புதிய வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி புதன்கிழமை தவிர தினந்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு-எர்ணாகுளம் வந்தே பாரத் ரெயில் (எண் 26651) 5.20 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 8.15 மணிக்கு சேலம், 9 மணிக்கு ஈரோடு, 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவை, 11.30 மணிக்கு பாலக்காடு, 12.30 மணிக்கு திருச்சூர், 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறுமார்க்கமாக புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் (எண் 26652) 3.20 மணிக்கு திருச்சூர், 4.35 மணிக்கு பாலக்காடு, 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம், 10.25 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 11 மணிக்கு பெங்களூரு நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
- வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையேயான 53 கி.மீ ஒற்றை அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், சென்னை- ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து புதிய பகல்நேர வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான திட்டம் ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் ரெயில் சேவைகள் இயக்கப்படவில்லை.
இரவு நேர சேவையாக சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், போட் மெயில் எக்ஸ்பிரஸ் உள்பட 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் விடப்பட்டால் தற்போது ஓடும் ரெயில்களில் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே 53 கி.மீ. நீளமுள்ள முழு ரெயில் பாதையும் இப்போது மின்சார என்ஜினை இயக்கும் வகையில் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உச்சிப்புளி ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பருந்து கடற்படை விமான நிலையத்திற்கு அருகில் மேல்நிலை மின்கேபிள்கள் இல்லாமல் சுமார் 220 மீட்டர் இடைவெளி காணப்பட்டது.
எனவே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான இறுதி பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநாளில் ராமேசுவரத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு ரெயிலை இயக்குவதற்கு, வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து 8 மணி நேரத்திற்குள் ராமேசுவரத்தை அடைய வேண்டும். எனவே வழித்தடத்தை இறுதி செய்வதற்கு முன்பு பயண நேரம் மற்றும் பாதையின் தன்மை ஆகியவை ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
- பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நெல்லை:
அதிநவீன சொகுசு வசதியுடனும் விரைவாக செல்லும் நோக்கிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லை, சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
காலை 6.05 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு இந்த ரெயில் மதியம் 1. 40 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்து விடும்.
வழக்கமாக மற்ற அதிவேகமாக செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் கூட 10 மணி நேரத்தில் தான் சென்னையை சென்றடையும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 7¾ மணி நேரத்தில் சென்றடைந்து விடும். இதன் காரணமாக இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. அதிநவீன வசதி அதிவேகம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
தென்னக ரெயில்வேயில் அதிக வசூலை வழங்கக்கூடிய நிலையங்களாக இருக்கும் நெல்லை, மதுரை உள்ளிட்ட நிலையங்கள் இருக்கும் நிலையில் 16 பெட்டிகளுக்கும் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகும் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருந்ததால் இந்த ரெயிலை 20 பெட்டிகளை கொண்ட புதிய ரெயிலாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலித்த ரெயில்வே நிர்வாகம் சென்னை ஐ.சி.எப்.இல். தயாரான புதிய 20 பட்டியலை கொண்ட காவி மற்றும் கிரே நிறத்திலான ரெயிலை நெல்லைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுப்பி வைத்தது. நெல்லை ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன் அடிப்படையில் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து இந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.
16 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இருக்கும்போது 1128 பயணிகள் இதில் அதிகபட்சமாக பயணித்த நிலையில் 20 பெட்டிகள் கொண்ட புதிய ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை 1440 ஆக உயரும்.
ஆயுத பூஜை, விஐயதசமி, தசரா திருவிழா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
- கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முதல் நிரந்தர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
அதாவது, சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாராகும் பெட்டிகளை கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரெயிலாக வந்தே பாரத் ரெயில் உள்ளது. பிற ரெயில்களை விட வந்தே பாரத் ரெயிலில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வந்தே பாரத் ரெயில்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரெயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. இந்த ரெயில் மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வாரந்தோறும் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரெயிலில் தற்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, நாளை (வியாழக்கிழமை) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் கூடிய ரெயிலாக இயக்கப்பட உள்ளது. இதற்கான ரெயில் பெட்டிகள் நேற்று கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.
கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
- மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
- வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
அதன்படி, மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண்-20671, 20672) வருகிற 11-ந்தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
அதே போல, மங்களூரு சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் (20631, 20632) வருகிற 9-ந்தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
- 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிவேக பயணம், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயல் இயக்குனர் தீலிப்குமார் கூறும்போது, "தற்போது, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத்-திருப்பதி,
சென்னை எழும்பூர்-நெல்லை ஆகிய 3 வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 20 பெட்டிகளாகவும், மீதமுள்ள மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா மற்றும் இந்தூர்-நாக்பூர் ஆகிய 4 வழித்தடங்களில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும்" என்றார்.
- வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது.
- ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
நெல்லையில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டத்தை பார்த்த பயணிகள் அச்சமடைந்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை அருகே வந்தே பாரத் ரெயில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குளாகினர்.
நேற்று கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்று தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






