என் மலர்

  நீங்கள் தேடியது "Prime Ministers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.
  • பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.

  ஒரு வருடத்திற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.

  பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை ( 2022 - 23) வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2022 ஆகும்.மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421 - 2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

  இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்திக் கொண்டு 30-11-2022-க்குள் www.ksb.gov.in என்ற KSB இணையதளத்தில் பாரதபிரதமரின் கல்வி உதவிக்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TeachersDay
  புதுடெல்லி:

  முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்” என்று ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த சிறந்த நாளில் ஆசிரிய சமூகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இளம் மனங்களை வடிவமைப்பதிலும் தேசத்தை கட்டமைப்பதிலும் ஆசிரியரிகளின் பங்களிப்பு முக்கியமானது. நமது முன்னாள் ஜனாதிபதியும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இன்று அவரை நாம் வணங்குவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

  தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. #TeachersDay

  ×