search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex-Serviceman"

    • நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது.
    • 50- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    திருப்பூர் : 

     திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் இந்தியா -பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியும் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இராணுவ வீரர்கள் வால்ரஸ் டேவிட், அஜ்மல் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது முன்னாள் ராணுவ வீரரும் வால்ரஸ் நிறுவனத்தின் இயக்குனருமான வால்ரஸ் டேவிட் பேசியதாவது:- 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி விஜய் திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது, விடுதலைப் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

    மழையிலும் வெயிலிலும், பனியிலும் ராணுவ வீரர்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற அயராது பாடுபட்டு வருகிறார்கள் .அவர்களை அனைவரும் போற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் நாட்டை நேசிக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், விக்னேஷ், ஜெயசந்திரன், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பிறகு ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய நாடு என் நாடு, என் நாட்டை பெரிதும் நேசிப்பேன், ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்க தவறமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.
    • பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022 - 23-ஆம் கல்வி ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளது.

    ஒரு வருடத்திற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.

    பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை ( 2022 - 23) வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2022 ஆகும்.மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421 - 2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்திக் கொண்டு 30-11-2022-க்குள் www.ksb.gov.in என்ற KSB இணையதளத்தில் பாரதபிரதமரின் கல்வி உதவிக்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×