என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா விருது"

    • தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படும்.
    • கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படும்.

    சென்னை:

    2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது.

    2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள் மொழிக்கு வழங்கப்படுகிறது.

    அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ.வுக்கும், பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும் வழங்கப்படுகிறது.

     

    பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம்.இதயத் துல்லாவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமை செயலாளர் முதுமுனைவர் வெ.இறையன்புக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சு.செல்லப்பாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்படுகிறது.

    விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக ரூபாய் 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

    மேற்குறிப்பிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாளான வருகிற 16-ந்தேதி விருதாளர்களுக்கு வழங்க உள்ளார்.

    • இணையதளம் வாயிலாக மட்டுமே https://awards.tn.gov.in அண்ணா விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • அறை எண்.234, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023 -ம் ஆண்டிற்கு மாநில அளவிலான விருதிற்கு உயிர் காக்கும் துணிச்சலான செயல் மற்றும் உடமைகள் மீட்டெடுத்தமை போன்ற செயல்புரிந்த அரசு ஊழியர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே https://awards.tn.gov.in அண்ணா விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். 14.12.2022-க்குள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துரு வினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.234, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

    சேலம்:

    தமிழக அரசின் சார்பில் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சேலம் மாநகரம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிற்கு அண்ணா விருதுடன், ரூ.10 ஆயிரம் வெகுமதியும், சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதுடன் ரூ.5 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படுகிறது.

    இதேபோல் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள் முருகன் மற்றும் காளியப்பன் ஆகியோருக்கும் அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

    ×