என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக கூட்டணி"

    • 41 குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என விஜய் நேரில் வரவழைத்துள்ளார்.
    • விஜயின் மாஸ், ஓட்டாக மாற தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை.

    அதிமுகவுடன் விஜய் கூட்டணிக்கு வருவது பாதுகாப்பாக அமையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது.

    மீண்டும் கரூருக்கு சென்றால் அசம்பாவிதம் நிகழலாம் என்பதால் விஜய் அங்கு செல்லவில்லை.

    41 குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என விஜய் நேரில் வரவழைத்துள்ளார்.

    விஜயின் மாஸ், ஓட்டாக மாற தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை.

    அதிமுக கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு நல்லது, வரவில்லை என்றாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.

    விஜயை கூட்டணிக்கு அழைக்கவில்லை.. வந்தால் வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
    • அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல, வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனமும் கூடவே எழுந்தது.

    நெரிசல் சாவு பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கும்பமேளா, கர்நாடகாவில் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு, ஆந்திராவில் அல்லு அர்ஜுன் திரைப்படம் பார்க்க சென்றபோது அவரை பார்க்க வந்து உயிரிழப்பு சம்பவம் போன்ற பல்வேறு இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன. எதற்காக அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை..

    கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பா.ஜ.க.வின் வாடிக்கையாக உள்ளது. கற்பனையாகவும், யூகத்தின் அடிப்படையிலும் பல செய்திகளை நயினார் நாகேந்திரன் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

    தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமித்த பிறகும் அண்ணாமலை தான் தலைவர் போன்று மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார்.

    அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த சூழலும் இல்லை. அதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்..

    கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம் படிப்பினை கிடைத்திருக்கிறது. அதனால் அவர் பின்னால் யாரும் வர வேண்டாம். தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது தவறில்லை. கரூர் சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது குறித்து நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.

    அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு த.வெ.க.வோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறார்களா?. அவ்வாறு அமைந்தால் அ.தி.மு.கவின் நம்பகத்தன்மை போய்விடும்.

    அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 50 இடங்கள் போக மீதமுள்ள 174 இடங்களிலும் அ.தி.மு.க. களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆட்சி தான் எப்போதுமே நடந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. களம் காண்கிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அந்தக் கட்சி விரும்புகிறது. குறிப்பாக அ.தி.மு.க. கூட்டணியில் 50 தொகுதிகளை பெறுவதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    இந்த 50 இடங்களில் சுமார் 40 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மீதமுள்ள 10 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு என பிரித்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த 50 இடங்கள் போக மீதமுள்ள 174 இடங்களிலும் அ.தி.மு.க. களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான அண்ணாமலை கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அண்ணாமலையே மறுத்துள்ளார்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக நான் எந்தவிதமான கடிதத்தையும் டெல்லி தலைமைக்கு அனுப்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியோடு உள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பெறும் 50 இடங்களில் கச்சிதமான தொகுதிகளில் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதும் அவர்களின் இலக்காக உள்ளது.

    அப்போதுதான் கூட்டணி ஆட்சி என்கிற கோஷத்தை தமிழகத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆட்சி தான் எப்போதுமே நடந்துள்ளது.

    அ.தி.மு.க.வும் கூட்டணி ஆட்சிக்கு எக்காலத்திலும் சம்மதிக்காது என்று அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்த கேளிக்கை வரி யாருக்காக குறைக்கிறார்கள்?
    • மின்கட்டணம், சொத்து வரியை எப்போது குறைப்பீர்கள்? என்றார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை நம்பி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் வருவதுபோல் தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி–னர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

    புரணி பேசுவதற்கெல்லாம் கருத்து சொல்ல வேண்டுமா?

    இதே ஆதவ் அர்ஜூனா தான் என்னை அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைத்தார். துணை முதல்-அமைச்சர் ஆக்குகிறேன் என்றார். அதற்கு என்ன செய்வது? என பதிலளித்தார்.

    இதேபோல், திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு குறித்த கேள்விக்கு, 'அதனால் என்ன நன்மை திரைத்துறைக்கு நடக்கும். ஒரே ஒரு நிறுவனம், குடும்பம்தான் மொத்த படத்தையும் வாங்கி வினியோகம் செய்கிறது. அவர்கள் நினைக்கும் படம்தான் வெளியாகும். அந்தவகையில் இந்த கேளிக்கை வரி யாருக்காக குறைக்கிறார்கள். மின்கட்டணம், சொத்து வரியை எப்போது குறைப்பீர்கள்? அதற்கு பதில் இருக்கிறதா?' என சீமான் பதிலளித்தார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி என அறிவிப்பு.
    • யார், யாருக்கு எத்தனை தொகுதி, ஆட்சியமைக்கும் முறை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

    அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமித்ஷா மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் மோடி தலைமையிலும் மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    பாஜக, அதிமுக கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியமைக்கும். ஜெயலலிதா காலம் முதலே, அதிமுகவுடன் இணைந்து பாஜக பயணித்து வருகிறது.

    அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக உறுப்பினர் அமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு வெற்றிப்பெற்ற பிறகு பதில் சொல்கிறோம்.

    அதிமுக தரப்பில் இருந்து எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணி என்பது அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் தலையிட முடியாது.

    அதிமுகவின் தனிப்பட்ட கட்சி விஷயங்களில் பாஜக பங்கேற்காது, தேர்தல் விவகாரத்தில் மட்டுமே பங்கேற்போம்.

    யார், யாருக்கு எத்தனை தொகுதி, ஆட்சியமைக்கும் முறை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    அதிமுக பாஜக கூட்டணியால் இருவருக்குமே பலன் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.
    • பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    அதிமுக உடன் கூட்டணி இல்லை என தெளிவாக இருக்கிறேன் என்றும் அவ்வாறு இருப்பின் ராஜிமானா செய்வேன் என்று கூறினீர்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எப்போதும் பேச்சை மாற்றி பேசுபவன் நான் இல்லை. வருங்காலத்தில் என்னை பார்ப்பீர்கள், எதையும் மாற்றி பேச மாட்டேன்.

    நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.

    பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாளை மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது.
    • ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி விட்டன.

    அ.தி.மு.க. கட்சிக்குள் சட்ட ரீதியாக சிக்கல் முடிவுக்கு வராத நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதும் அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என்று இருவிதமான எண்ணத்தில் தவிக்கிறது.

    அ.தி.மு.க. போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும். இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கையெழுத்து போட வேண்டும்.

    அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாரில்லை. அவர் தனியாக வருகிற 23-ந்தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    எனவே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    த.மா.கா.விலும் போட்டியிட தயக்கம் உள்ளது. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

    சின்னம் கிடைக்காத பட்சத்தில் த.மா.கா.வின் சின்னங்களான ஆட்டோ அல்லது தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அது இந்த குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமடையுமா? என்ற சந்தேகம் உள்ளது. அது மட்டுமல்ல இடைத்தேர்தலில் போட்டியிட அதிகமான பணச்செலவாகும்.

    பொதுத்தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். ஆனால் இடைத்தேர்தலில் போட்டி அந்த அளவுக்கு இருக்காது என்பதால் பணம் செலவழிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட சூழலில் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? என்றுதான் தயங்குகிறார்கள்.

    இந்த நிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பெஞ்சமின் ஆகிய அ.தி.மு.க. நால்வர் குழு இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    சந்திப்பு முடிந்ததும் தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

    இன்று அ.தி.மு.க. தலைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இன்றைய அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு எங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதற்கான வியூகங்களை வகுப்பது பற்றி இரு தரப்பினரும் ஆலோசித்தோம்.

    எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, மக்கள் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்சியின் மீது அவநம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவையெல்லாம் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை உணர்வுகளையே அதிகரிக்க வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டணி கட்சிகள் கூடிப்பேசி எந்த கட்சி போட்டியிடுவது? வேட்பாளர் யார்? என்ற விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்படி இரு கட்சிகளும் தயங்குவதை காரணம் காட்டி கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராகி வருகிறது.

    இதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தா, சரஸ்வதி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, வேல் பாண்டியன் உள்ளிட்ட 14 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

    பா.ஜனதா களம் இறங்கி பலத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் கட்சியினரிடையே உள்ளது. டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார். நாளை இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை காளிங்கராயன் பாளையத்தில் காளிங்கராயன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.வின் செங்கோட்டையன், த.மா.கா.வின் விடியல் சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்கள் தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    நாளை (21-ந்தேதி) மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    • தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

    திண்டுக்கல்:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

    திண்டுக்கல் சீலப்பாடி அருகே ரூ.18.70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை இன்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, தொண்டர்களை உற்சாகமாக கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசி உள்ளார்.

    ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

    அந்த கூட்டணிக்கு இந்தியாவில் பா.ஜ.க. தலைமை வகிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதுவரை எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.
    • சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களிடம் கரு.நாகராஜன் கூறியதாவது:-

    எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.

    தமிழகத்திற்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு பத்திரிக்கையின் வாயிலாக அறிவொளி இயக்கம் நடத்துவதைப் போல் படிக்காத பாமரரையும் படிக்க வைத்த மிகப்பெரிய பெருமை ஆதித்தனாருக்கு உண்டு. அவர் புகழ் என்றென்றும் ஓங்கி உயர வேண்டும் என்றார்.

    கே: அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் அண்ணாமலைக்கு கட்சியில் நெருக்கடி இருக்கிறதா?

    ப: சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை. தேசிய தலைமை முடிவெடுத்த பின் முடிவு சொல்லப்படும்.

    கே: கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் கூட்டணி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனரா?

    ப: கட்சித் தலைவர்கள் அவர்களின் கட்சி சார்பில் முடிவெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
    • அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று இருந்த அ.தி.மு.க. விலகியது அந்த கூட்டணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.வை விமர்சித்ததும் அண்ணா பற்றி கூறிய கருத்தும் அ.தி.மு.க. தலைமைக்கு பிடிக்கவில்லை. இதுவே கூட்டணி முறிவுக்கான காரணம்.

    அண்ணாமலையின் செயல்பாட்டில் தங்களுக்கு திருப்தியில்லை என்று அ.தி.மு.க. தலைவர்கள் நேரிலேயே டெல்லி தலைவர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகினார்கள். இனிமேல் பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துவிட்டனர்.

    ஆனால் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது. இந்த தேர்தலில் போடும் அடித்தளம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கைகொடுக்கும் என்று கருதுகிறார்.

    அண்ணாமலையின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் ஆதரவும் இருக்கிறது. அதேநேரம் பலமான கூட்டணி அமைத்தால் தான் சில தொகுதிகளில் ஜெயிக்க முடியும் என்று மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

    3-வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் டெல்லி தலைவர்கள் அண்ணாமலையின் அக்னி பரீட்சைக்கு சம்மதிப்பார்களா? அல்லது கூட்டணிக்கான முயற்சியை முன்னெடுக்க வலியுறுத்துவார்களா? என்று தெரியவில்லை.

    இந்நிலையில் நாளை (1-ந் தேதி) அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூட்டணி முறிவுக்கான காரணங்களை விளக்குவார் என்று கூறப்படுகிறது.

    அடுத்த கட்டமாக தமிழகத்தில் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அமித்ஷா ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 3-ந் தேதி (செவ்வாய்) மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் அமைந்தகரை அய்யாவு மகாலில் நடக்கிறது. அன்று மாலையில் கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.

    டெல்லியின் முடிவுகளை கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் அதற்கு தி.முக. தரப்பில் இன்னும் இறுதியாக எதுவும் தெரிவிக்காததால் விடுதலை சிறுத்தைகளும் தயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரம் பா.ம.க.வும் தனது முடிவை அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும். திமு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று கூறி வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகளை குறி வைத்தே அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

    விடுதலை சிறுத்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது.

    4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


    அப்போது பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.க. வரும் என்பது உறுதியாகவில்லை என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி இருக்கிறார்கள்.

    ஆனாலும் அ.தி.மு.க.வின் 'ஆஃபரை' ஏற்க விடுதலை சிறுத்தைகள் தயக்கம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் அ.தி.மு.க. 5 இடங்கள் வழங்கினாலும் அது வேட்பாளராகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள் நிச்சயம் எம்.பி.க்கள் ஆகி விடுவார்கள் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    எனவே இந்த தேர்தலில் விட்டுவிடுங்கள். பின்னர் பார்க்கலாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.

    இன்னமும் அதிமுக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனாலும் திருவள்ளூர் எங்களது சொந்த தொகுதி என்பதால் அதை நிச்சயம் கேட்டு வெற்றி பெறுவோம் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை வெளிப்படையாக மீறி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஒரு மதத்தை மட்டுமே வைத்து அவர் வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார். ஹிந்து மத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. நான் கூட ஹிந்து தான் ஆனால் பாஜகவின் மத அரசியலை நான் ஆதரிக்கவில்லை என்று பூவை ஜெகன் மூர்த்தி பேசியுள்ளார்.

    மேலும் "திமுக வெல்லக் கூடாது என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக உள்ளது. பாஜக ஜெயிக்காது என பிரதமர் மோடிக்கே தெரியும். அதனால்தான், அதிமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை என அக்கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ளார் என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

    ×