என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் சீனிவாசன்"

    • சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
    • தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு அவர் விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    அதேபோல் செங்கோட்டையனும் அரசியலுக்காக பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் இருந்த போது தனிப்பட்ட முறையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்தார். தற்போது அவர் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நயினார் நாகேந்திரன் குறித்தும் பேசி வருகிறார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் சென்றால் வள்ளலார் ஆட்சி என்பார். தூத்துக்குடி சென்றால் வ.உ.சி. ஆட்சி என்பார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.

    தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது. தனது சொந்த செல்வாக்கில் ஜெயிக்க வேண்டும். மேலும் 30 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகிறார். ஆனால் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அவர்கள் தி.மு.க.வில் எதுவும் அறுவடை செய்ய முடியுமா என்பதற்காக அங்கு சென்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும்.
    • பத்து ரெயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும்.

    திண்டுக்கல்லில் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.

    அப்போது ஆசிரியர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "சகோதரி... மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள் எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம் திமுகவைத் தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சியாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். பத்து ரெயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும். வேறு யாரிடம் கேட்க முடியும். மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி
    • எல்லோரும் ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். அவர் தாம்பளத்தில் அடிக்கிறார்.

    தவெக மூன்றாமாண்டு தொடக்கவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர்,

    "முதன்முதலில் எம்.ஜி.ஆரை பார்த்து சினிமா படத்தைப்போல 100 நாட்கள்தான் இது ஓடும் என்றார்கள். ஆனால் அவர் உயிருள்ளவரை அவர்தான் அவர்தான் தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர். அதற்கு பிறகு பொறுப்பேற்ற ஜெயலலிதா இருந்தவரை அந்த இயக்கத்தை யாராலும் அசைக்கமுடியவில்லை. இன்று, நாளை தமிழ்நாட்டை ஆளப்போகிறேன். எதிர்கால தமிழ்நாட்டை உருவாக்கப் போகிறேன் என தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதுபோல தொடர்ந்து பல இடங்களில் விஜய்யை புரட்சித்தளபதி எனக்கூறி வருகிறார். இந்நிலையில் விஜய்யை செங்கோட்டையன் இவ்வாறு அழைப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "இதுகுறித்து நான் கண்ணீர்தான் விடவேண்டும். எங்களுடன் இருந்த ஒரு பெரியமனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டாரே என்று கண்ணீர்தான் விடவேண்டும். எல்லோருக்கும் ஒரு தகுதி இருக்கும். எல்லோரும் ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். அவர் தாம்பளத்தில் அடிக்கிறார். அப்பொழுதும் அவரை நான்காவது, ஐந்தாவது இடத்தில்தான் உட்கார வைத்துள்ளனர். எங்களுக்கு அந்த நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் கண்ணீர் வடிக்கிறோம். அவரது நிலை தாழ்ந்து விட்டது" என தெரிவித்துள்ளார். 

    • ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக தி.மு.க.வினர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி வருகின்றனர்.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக தி.மு.க.வினர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி வருகின்றனர். அமைச்சர் இ.பெரியசாமி மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர் விடுதலையான வழக்கை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அமைச்சர் இ.பெரியசாமி தனது முதுகில் உள்ள அழுக்கை பார்த்து விட்டு மற்றவரை குறை கூற வேண்டும். அவர் மட்டுமின்றி அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்பட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது.

    தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகள் ஏற்கனவே புஸ்வானமாகிவிட்டது. இந்நிலையில் புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர். அ.தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி ஏதாவது ஒன்றை நிறைவேற்றவில்லை என தெளிவாக கூறாமல் அமைச்சர் இ.பெரியசாமி குறை கூறி வருகிறார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு அண்டா, ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். அதில் 10 சதவீதம் கூட தரமான பொருள் கிடையாது. 100 வீடுகள் என்றால் 10 வீடுகளுக்கு மட்டுமே தரமான பொருள் இருக்கும். எவ்வளவு பணம் கொடுத்தாலும், பரிசு பொருள் கொடுத்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு கெட்டபெயர்தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    விஜய் திரைப்படங்களில் நடித்ததற்காக கருப்பு பணம் வாங்கியது உண்மைதான். இதை நாங்கள் சொல்லிக்கொண்டேதான் இருப்போம். நாங்கள் மட்டுமல்ல தி.மு.க.வினரும் இது குறித்து பேசி வருகின்றனர். ஆனால் செங்கோட்டையன் எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசி வருகிறார். தனது சம்பளம் முழுவதையும் வெள்ளை பணமாக மட்டுமே வாங்கினேன் என அவரால் சொல்ல முடியுமா?

    நிர்மலா சீதாராமன் மக்களவையில் தமிழ் குறித்து என்ன பேசினார் என எனக்கு தெரியாது. அதற்கு கமல்ஹாசன் என்ன பதில் அளித்தார் என்றும் எனக்கு தெரியாது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் என்.டி.ஏ. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.
    • நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

    நான்கரை ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் சென்றடையவில்லை. இதனை பெண்கள் புரிந்து கொண்டு உள்ளனர். மகளிருக்கு ரூபாய் 1000 கொடுத்துவிட்டு டாஸ்மாக், மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். அத்தியாவசிய பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ரூ. 5 ஆயிரம் செலவு செய்யக்கூடிய குடும்பம் தற்போது ரூ.10 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.

    தி.மு.க. அளிக்கும் ரூ.1000 சென்று சேரும்பொழுது நாங்கள் கொடுக்கும் ரூ.2000 சென்று சேராதா? சென்ற தேர்தலில் ரூ.1500 அறிவித்து அது மக்களிடம் சென்று சேரவில்லை அதனால் தற்போது அறிவித்துள்ளார். கட்டாயம் இல்லங்களுக்கு சென்று சேரும்.

    ஆளும் கட்சியாக தி.மு.க. உள்ளது. யாரை உருட்டுவது, மிரட்டுவது. எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. பா.ஜ.க.வுடன் ஏற்கனவே இருந்த கூட்டணி தான், டி.டி.வி. அவருடன் தான் இருந்தார். தற்போது வந்துள்ளார். பொய்யான தகவலை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.

    நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. மக்களிடம் வரவேற்பும் உள்ளது. ஆளுங்கட்சியிடம் பணம் உள்ளது. பல தவறான வழிகளில் இருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது.

    ஓய்வூதியம் என்று அறிவித்திருப்பது ஊதியத்தின் 10 சதவீதம் பிடித்தம் செய்து பின்பு கொடுப்பது. அவர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கவில்லை. தி.மு.க.வில் உள்ள சிலர் இனிப்பு வழங்கி வெற்றி பெற்றதாக தெரிவித்து வருகின்றனர். இன்று வரை இடைநிலை ஆசிரியர் போராடி வருகின்றனர். இப்படி இருக்க எப்படி வெற்றியடையும்.

    கஞ்சா விற்பவர்களை காவல்துறை பிடித்தால் உடனடியாக அமைச்சர் பேசுகிறார். அனைவருக்கும் பங்கு செல்வதால் யாரும் கண்டு கொள்வதில்லை.

    காவல்துறையினரே கஞ்சா விற்பனை செய்தார் என செய்தி வருகிறது. அரசாங்கமும் காவல்துறையும் கூட்டாக செயல்படுகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு மாநிலம் என சான்றிதழ் பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு எங்கு உள்ளது. கனிமொழி பங்கேற்ற கூட்டத்திலேயே பாதுகாப்பு இல்லை.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். அதிகாரப்பூர்வமாக விரைவில் செய்தி வெளிவரும். லாட்டரி வியாபாரி மார்ட்டின் மருமகனை அருகில் வைத்துக் கொண்டு விஜய் ஊழலை ஒழிப்பதாக பேசி வருகிறார். லஞ்சம் வாங்க மாட்டேன் என அவர் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணம் தினகரன், சசிகலாவிடம் இருப்பதாக பேசிய பேச்சுகள் உண்மை. அவர்கள் பேசியதும் உண்மை. தற்போது இணைந்து விட்டதால் எல்லாம் முடிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்துள்ள நிலையில் திண்டுக்கல் சி.சீனிவாசனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது.
    • எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

    இன்றும் நாளையும் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் விடுபட்ட வாக்காளர்களையும், புதிய வாக்காளர்களையும் சேர்க்க நிர்வாகிகள் உதவ வேண்டும். பெயர் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர் உள்பட வீடு தோறும் சென்று தங்கள் பகுதியில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்களின் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது. அதன்பிறகு மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே 6,7,8 வாக்காளர் விண்ணப்ப படிவங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளின் படிதான் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026-ல் நல்லாட்சி மலர்கின்றபோது 150 நாட்களாக உயர்த்தப்படும்.

    ஆனால் 100 நாள் வேலை திட்டத்தையே நிறுத்தி விடுவார்கள் என தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

    தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதில் தி.மு.க.வினர் வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொரு பூத்துகளின் மூலம் பி.எல்.ஓ.க்களை கொண்டு 300 வாக்குகளை சேர்த்து உள்ளனர். அதனை நீக்க வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் நம்பிக்கைக்கு உள்ளவர்களாக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பட்டியலை கட்சியினர் துண்டு பிரசுரங்களாக பிரசுரித்து மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கட்சியினர் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.

    • SIR பணிகளுக்கு, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. SIR பணிகளுக்கு, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    SIR பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், "ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    சீமான் பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "SIR பணிகளால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் குறையும். SIR நடைமுறையை எதிர்க்கக் கூடாது. இது வழக்கமாக நடைபெறுவதுதான். பீகார் வெற்றிக்கு காரணமே SIR தான். பீகார் தேர்தல் வெற்றி அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். நிதிஷ்குமாரைப் போல 2026 தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார்" என்று தெரிவித்தார்.

    • செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.
    • ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இ.பி.எஸ்.-ஐ விட செங்கோட்டையன் வயதில் மூத்தவர் அவ்வளவு தான்.

    * ராகுல் காந்தி கூட தான் வயதில் சிறியவர், ஆனால் தலைவர்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள்.

    * செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.

    * கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி A1 குற்றவாளி என்றால் சிறையில் தள்ளி விடலாமே?

    * ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.

    * டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் செங்கோட்டையன் மாட்டிக்கொண்டார்.

    * இங்கு ராஜாவாக இருந்த செங்கோட்டையன் அங்கு கூஜா தூக்குவது போல் ஆகிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள்.
    • யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 54-ம் ஆண்டு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    4½ ஆண்டுகள் மக்களைப்பற்றி கவலைப்படாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என மனுக்களைப் பெற்று வருகிறார். தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து விட்டு மக்களை ஏமாற்றினர். ரூ.1000 கொடுத்து விட்டு ரூ.5000 வரை மக்களிடம் இருந்து பறிக்கின்றனர். டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர்கள் வெளியே சென்று விட்டதால் அ.தி.மு.க. அழிந்து விட்டதாக பேசுகின்றனர். அ.தி.மு.க.வை அழிக்க யாராலும் இயலாது. தன்னை வளர்த்த இயக்கத்தை மறந்து விட்டு செங்கோட்டையன் எதிர் முகாமிற்கு சென்றுள்ளார்.

    தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் அவர் சிக்கிக்கொண்டார். முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள். யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சகிகலா உதவியாளராக இருந்தார். டி.டி.வி.தினகரன் போன்ற அவரது குடும்பத்தினர் ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தனர். அந்த சொத்துக்களை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதனை மத்திய அரசு கண்டு பிடித்துள்ளது. விரைவில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதியப்படுவது உறுதி.

    சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் யாரை ஒருங்கிணைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் சரண் அடைந்து விட்டனர். இவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி ஊரை ஏமாற்றுகின்றனர். இவர்கள் 4 பேருடன் வேறு யாராவது ஒன்று இரண்டு பேர் இருந்தால் அவர்களும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுவார்கள்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் அ.தி.மு.க.பற்றி தவறான கருத்துகளை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பரப்பி வருகின்றனர். தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் சேரும். வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் என்று பேசினார். 

    • பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது.
    • நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறுகிறார். அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். அவரது முடிவுதான் எங்களது கருத்து. பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது.

    நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம். மூத்த அமைச்சர்கள் 6 பேர் சென்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒன்றிணைய வேண்டும் என கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தது உண்மையா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் முடிவை அவர் தெரிவித்துள்ளார்.

    எங்களது முடிவு பொதுச்செயலாளர் அறிவிக்கும் முடிவை பொறுத்து இருக்கும் என்றார். 

    • கல்லாறு முதல் வளைவு அருகே வந்த போது கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது.
    • திவ்ய பிரியா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தி திவ்ய பிரியா(28). திவ்ய பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார். இன்று மாலை காரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்றனர்.

    பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.. மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு முதல் வளைவு அருகே வந்தபோது கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் திவ்ய பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. வளர்மதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்ய பிரியா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது.
    • வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயமாக தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்யும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்க முடிந்தது. குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகள் இலவசமாக மண் அள்ளிக்கொள்ள அனுமதி கொடுத்ததும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில், சினிமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நிச்சயமாக தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றார்.

    இதனிடையே, சைத்தான் கூட்டணியால் தான் தோற்றோம் என்று கூறிவிட்டு மீண்டும் ஏன் சைத்தாவுடன் கூட்டணி வைத்தீர்கள் என பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திண்டுக்கல் சீனிவாசன், அரசியல்வாதிகள் சூழலுக்கேற்ப மாற்றிமாற்றிதான் பேசுவோம். பழசை எல்லாம் துடைத்துவிடவேண்டும் என்றார்.

    ×