என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியின் வருகையால் இயற்கையே இன்று சூரியனை மறைத்துவிட்டது- இபிஎஸ்
- திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.
- ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுராந்தகத்தில் நடக்கும் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பிரதமர் என்ன பேசப்போகிறார் என நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
என்டிஏ கூட்டணி பொபதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதால் இயற்கையே இன்று சூரியனை மறைத்துவிட்டது.
நம்மை எதிர்ப்பவர்கள் தீயவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எஞ்சியது துன்பமும் வேதனையும் தான்.
ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
திமுகவின் நான்கே முக்கால் ஆண்டு ஆட்சியில் அவர்களின் ஒரே சாதனை ஊழல், ஊழல், ஊழல் மட்டும் தான்.
இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல், தீயச்சக்தி திமுகவை நீக்குவோம், எம்ஜிஆர், அம்மா கண்ட கனவை நிறைவேற்றுவோம்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று பல திட்டங்களை செயல்படுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






