search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. கூட்டணி முறிவு: அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்- அமித்ஷா, நட்டாவை சந்திக்கிறார்
    X

    அ.தி.மு.க. கூட்டணி முறிவு: அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்- அமித்ஷா, நட்டாவை சந்திக்கிறார்

    • மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
    • அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று இருந்த அ.தி.மு.க. விலகியது அந்த கூட்டணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.வை விமர்சித்ததும் அண்ணா பற்றி கூறிய கருத்தும் அ.தி.மு.க. தலைமைக்கு பிடிக்கவில்லை. இதுவே கூட்டணி முறிவுக்கான காரணம்.

    அண்ணாமலையின் செயல்பாட்டில் தங்களுக்கு திருப்தியில்லை என்று அ.தி.மு.க. தலைவர்கள் நேரிலேயே டெல்லி தலைவர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே மேலிடத்தின் அனுமதியுடன் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுவதாக அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகினார்கள். இனிமேல் பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துவிட்டனர்.

    ஆனால் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஒரு சில சீட்டுகளை கெஞ்சி கேட்கும் நிலையில் இருக்க கூடாது. இந்த தேர்தலில் போடும் அடித்தளம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கைகொடுக்கும் என்று கருதுகிறார்.

    அண்ணாமலையின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் ஆதரவும் இருக்கிறது. அதேநேரம் பலமான கூட்டணி அமைத்தால் தான் சில தொகுதிகளில் ஜெயிக்க முடியும் என்று மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

    3-வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் டெல்லி தலைவர்கள் அண்ணாமலையின் அக்னி பரீட்சைக்கு சம்மதிப்பார்களா? அல்லது கூட்டணிக்கான முயற்சியை முன்னெடுக்க வலியுறுத்துவார்களா? என்று தெரியவில்லை.

    இந்நிலையில் நாளை (1-ந் தேதி) அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூட்டணி முறிவுக்கான காரணங்களை விளக்குவார் என்று கூறப்படுகிறது.

    அடுத்த கட்டமாக தமிழகத்தில் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அமித்ஷா ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 3-ந் தேதி (செவ்வாய்) மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் அமைந்தகரை அய்யாவு மகாலில் நடக்கிறது. அன்று மாலையில் கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.

    டெல்லியின் முடிவுகளை கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×