விபத்து நடந்த இடத்திற்கு விரைகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைகிறார் பிரதமர் மோடி
Published on

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மாலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரதமர் மோடி, ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு விரைகிறார். பின்னர், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com