என் மலர்
இந்தியா

எம்.எஸ்.சுவாமிநாதன், நரசிம்மராவ் உள்பட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி
- தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது.
ஏற்கனவே, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூர் தாகூருக்கு பாரத ரத்னா விருது
அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர்களான சவுத்ரி சரண் சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகாரின் கர்பூரி தாகூர் உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






