என் மலர்
நீங்கள் தேடியது "பௌத்தம்"
- தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் அவர் தங்கியிருக்கும் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.
- தலாய் லாமாவை தேர்தெடுக்கும் அதிகாரம் தங்கள் அறக்கட்டளைக்கே உள்ளது என்று தெரிவித்தார்.
திபெத்திய பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பங்கேற்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திபெத்திய பிரச்சினைகளில் இந்தியா தனது சிறப்பு நலன்களை மனதில் கொள்ள வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "மதத்தின் பெயரால் திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை பறிக்க தலாய் லாமாவின் முயற்சிகள் உள்ளன. இந்தியா தனது உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் அவர் தங்கியிருக்கும் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.
இதன்முன், அடுத்த தலாய் லாமாவை தேர்தெடுக்கும் அதிகாரம் தங்கள் அறக்கட்டளைக்கே உள்ளது என்றும் வேறு எவரின் தலையீடும் இருக்க கூடாது எனவும் தலாய் லாமா வெளியிட்ட அறிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தங்கள் தாய்மொழியான திபெத்திய மொழியைப் பேச தடை விதிக்கப்பட்டு, சீன மொழியில் கற்பிக்கப்படுகிறார்கள்.
- திபெத்திய கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு "மாணவர் காலனித்துவம்" என்று TAI அறிக்கை தெரிவித்துள்ளது.
சீன ஆக்கிரமிப்பு திபெத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் சீன அரசு நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று திபெத்தியன் ஆக்ஷன் இன்ஸ்டிட்யூட் (TAI) அறிக்கை வெளியிட்டுள்ளது.
திபெத்தின் கிராமப்புறங்களில் இருந்து குறைந்தது ஒரு லட்சம் 4-6 வயதுடைய பாலர் பள்ளி குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு சீன நிர்வாகத்தால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, 6-18 வயதுடைய சுமார் 9 லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் துறவிகள் கூட இந்தக் கட்டாயப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த பள்ளிகளில் குழந்தைகள் தங்கள் தாய்மொழியான திபெத்திய மொழியைப் பேச தடை விதிக்கப்பட்டு, சீன மொழியில் கற்பிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் சீன மொழியைக் கற்கவும் பேசவும் கட்டாயப்படுத்தப்படுவதோடு, அரசு அங்கீகரிக்கப்பட்ட வரலாறு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இது திபெத்திய கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு "மாணவர் காலனித்துவம்" என்று TAI அறிக்கை தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து போதனைகள் வழங்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
ஜூன் 18, 2024 அன்று ஜினிங்கில் உள்ள திபெத்திய நடுநிலைப் பள்ளியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்
குழந்தைகள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும், சித்தாந்தக் கல்வி புகுத்தப்படுவதாகவும், அடையாள அழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த வாக்குமூலங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் சீன அரசின் தலையீடும், திபெத்திய மக்களின் தனித்துவத்தை அழிக்கும் இந்த அடையாள அழிப்பு கொள்கைகளும் திபெத்தின் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று TAI தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
திபெத்தின் 4,700 ஆண்டுகால கலாச்சாரத்தை அழிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் மேற்கொண்ட ஒரு திட்டமிட்ட உத்தி இது என அறிக்கையை தயாரிப்பதில் களப்பணி ஆற்றிய திபெத்திய சமூகவியலாளர் டாக்டர். கியால் லோ தெரிவித்துள்ளார்.
- அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் சீனாவின் தலையீட்டை எம்.பி.க்கள் குழு கடுமையாக எதிர்த்தது.
- தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திபெத்திய மக்களுக்கு மட்டுமே உள்ளது
நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான 'பாரத ரத்னா' விருதை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை உள்ளடக்கிய 'திபெத்திற்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற மன்றம்' சமீபத்தில் இது தொடர்பான முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.
பிஜேடி மாநிலங்களவை எம்.பி. சுஜீத் குமார் தலைமையிலான இந்த மன்றத்தில் பாஜக மற்றும் ஜே.டி.யு உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
தலாய் லாமாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளதாக மன்ற ஒருங்கிணைப்பாளர் சுஜீத் குமார் தெரிவித்தார்.
அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் சீனாவின் தலையீட்டை எம்.பி.க்கள் குழு கடுமையாக எதிர்த்தது. 14வது தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திபெத்திய மக்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை குழு தெரிவித்தது.
திபெத்துக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரஸ் சமீபத்தில் நிறைவேற்றிய மசோதாவை மன்றம் பாராட்டியது. நமது நாட்டின் நாடாளுமன்றத்திலும் இதேபோன்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று எம்பிக்கள் குழு அழுத்தம் கொடுத்துள்ளது.
1959 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வரும் தலாய் லாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
- 15 வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க 'காடன் போட்ராங் டிரஸ்ட்' மட்டுமே அதிகாரம் கொண்டது
- இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.
திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஜூலை 6 ஆம் தேதி தனது 90 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சீடர்களால் இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார்.
இதன்பின் சீடர்கள் மத்தியில் பேசிய அவர், "எனக்கு அவலோகிதேஸ்வரரின் ஆசிர்வாதம் இருக்கிறது. இதுவரை என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இன்னும் 30-40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்.
உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன. நாம் நம் நாட்டை இழந்துவிட்டோம், இந்தியாவில் ஒரு அகதியாக, தர்மசாலாவில் வசிக்கும் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது.
நான் இன்னும் என்னால் முடிந்தவரை அவர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்" என்று தலாய் லாமா கூறினார். இன்னும் சில ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பதற்கான தெய்வீக அறிகுறிகளைப் பெறுவதாக அவர் கூறினார். முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவதற்கு அளித்த பேட்டியில் 110 வயது வரை வாழ்வேன் என்று தலாய் லாமா கூறியிருந்தார்.
மறுபுறம், தலாய் லாமா தனது வாரிசைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 15 வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க 'காடன் போட்ராங் டிரஸ்ட்' மட்டுமே அதிகாரம் கொண்டது என்று அதில் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டில் தனது வாரிசைத் தேர்ந்தெடுப்பது குறித்து புத்த மதத் தலைவர்களுடன் விவாதித்ததாகவும், அவர்களின் நேர்மறையான கருத்தை பெற்றதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த விஷயத்தில் மற்ற சக்திகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று அவர் சீனாவை மறைமுகமாக எச்சரித்தார்.
திபெத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக சீனா நீண்ட காலமாக தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் தனது கட்டுப்பாட்டை நிறுவ முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே தலாய் லாமாவின் வாரிசு அவரது சொந்த விருப்பப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க திபெத் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.
- 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி அறிவிப்பு வெளியிட்டார்.
- முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு.
இந்தியாவின் தரம்சாலாவில் தஞ்சமடைந்துள்ள திபெத்திய பௌத்தம மத தலைவரான 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.
குறிப்பாக "சீனாவின் தலையீடு இல்லாமல், தனது வாரிசைத் தேர்வு செய்வதற்கான முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு" என்று தலாய் லாமா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலாய் லாமாவின் வாரிசு சீன மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், சீன சட்டங்கள், மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளுக்கு இணங்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
- அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார்.
- கோவிலின் நுழைவாயில் நேபாள பௌத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர்.
நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர்.
அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
கோவிலின் நுழைவாயில் நேபாள பௌத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர்.
எனவே இத்திருக்கோவில் சைவ, சமண, வைணவ, பௌத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.
- மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
- விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்படுவதில்லை.
குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் பௌத்தம், சீக்கியம் மற்றும் சமணம் ஆகியவை தனி மதங்கள் என்றும் இந்துவாக இருந்து இந்த மதங்களுக்கு மாற விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
குஜராத் மத சுதந்திர சட்டத்தின் கீழ் மதம் மாறுவதற்கு அனுமதி அவசியம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக குஜராத் உள்துறை அமைச்சகம் சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறுவது தொடர்பான விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் பௌத்த மதத்திற்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் மதம் மாறுவது தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது குஜராத் மத சுதந்திர சட்டத்தில் ஆட்சியர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்களுக்கு சில மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், "சட்ட விதி 25 பிரிவு 2-இன் கீழ் சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இந்து மதத்திற்குள் இடம்பெற்று இருப்பதால் மதம் மாறுவதற்கான அனுமதி பெற தேவையில்லை," என கோரி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும், குஜராத் மத சுதந்திர சட்டத்தின் படி இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களுக்கு மாறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.