என் மலர்tooltip icon

    உலகம்

    தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடியின் பிறந்தநாள் வாழ்த்து  - சீனா கண்டனம்
    X

    தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடியின் பிறந்தநாள் வாழ்த்து - சீனா கண்டனம்

    • தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் அவர் தங்கியிருக்கும் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.
    • தலாய் லாமாவை தேர்தெடுக்கும் அதிகாரம் தங்கள் அறக்கட்டளைக்கே உள்ளது என்று தெரிவித்தார்.

    திபெத்திய பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பங்கேற்றதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    திபெத்திய பிரச்சினைகளில் இந்தியா தனது சிறப்பு நலன்களை மனதில் கொள்ள வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "மதத்தின் பெயரால் திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை பறிக்க தலாய் லாமாவின் முயற்சிகள் உள்ளன. இந்தியா தனது உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.

    முன்னதாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் அவர் தங்கியிருக்கும் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.

    இதன்முன், அடுத்த தலாய் லாமாவை தேர்தெடுக்கும் அதிகாரம் தங்கள் அறக்கட்டளைக்கே உள்ளது என்றும் வேறு எவரின் தலையீடும் இருக்க கூடாது எனவும் தலாய் லாமா வெளியிட்ட அறிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×