பாரத ரத்னா விருது: அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர்

பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாரத ரத்னா விருது: அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர்
Published on

புதுடெல்லி:

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத ரத்னா விருது எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து, பாரத ரத்னா விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com