என் மலர்
செய்திகள்

ஜெர்மனி சென்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ தலைமையகத்தில் அணிவகுப்புடன் வரவேற்பு
அரசுமுறை பயணமாக ஜெர்மனி நாட்டுக்கு சென்ற ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் வீரர்கள் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #NirmalaSitharaman
பெர்லின்:
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நான்கு நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.
முதல் கட்டமாக ஜெர்மன் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி நிர்ம்லா சீதாராமனுக்கு அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் வீரர்கள் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர், ஜெர்மனி பாதுகாப்புத்துறை மந்திரி உர்சுலா வான் டெர் லியெனை நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். #NirmalaSitharaman
Next Story






