என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் - நேபாளத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
- டி20 போட்டியில் எப்போதாவது ஒருமுறை தான் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் வரும்.
- டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இப்போட்டி அமைந்தது.
டி20 போட்டியில் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். எப்போதாவது ஒருமுறை தான் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் வரும். ஆனால் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் ஒன்றல்ல, இரண்டல்ல, 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இப்போட்டி அமைந்தது.
நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
முதல் சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 19 ரன்கள் அடிக்க இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 17 ரன்களை அடித்தது.
இதனால் 3 ஆவது சூப்பர் ஒவ்வரு நடத்தப்பட்டது. அதில் நேபாளம் அணி முதல் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது.






