என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 தொடர்: ஆஸ்திரேலியாவில் மாறுபடும் Timing.. இந்தியாவில் ஒரே Timing
- இரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45-க்கு தொடங்குகிறது.
- ஆஸ்திரேலியாவின் உள்ளுர் நேரப்படி முதல் 3 போட்டிகள் மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45-க்கு தொடங்குகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவின் உள்ளுர் நேரப்படி முதல் 3 போட்டிகள் மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது. கடைசி 2 போட்டிகள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.ஆனால் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கே தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் நேரம் மாறுபட்டாலும் இந்தியாவில் அதே நேரத்தில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






