என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
- முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப் புக்கு 189 ரன் எடுத்தது.
- ஆஸ்திரேலியா அணி 18.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப் புக்கு 189 ரன் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 190 ரன் இலக்காக இருந்தது.
ரோஸ்டன் சேஸ் 32 பந்தில் 60 ரன்னும் (9 பவுண் டரி, 2 சிக்சர்), கேப்டன் ஷாய் ஹோப் 39 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயா 19 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பென் துவார்ஷ்யிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 7 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 190 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 18.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேமரூன் கிரீன் 26 பந்தில் 51 ரன்னும் (2 பவுண் டரி, 5 சிக்சர்), மிச்சேல் ஓவன் 27 பந்தில் 50 ரன்னும் (6 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 23-ந்தேதி நடக்கிறது.






