என் மலர்

  நீங்கள் தேடியது "NZvIND"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடைசி ஓவரில் குருணால் பாண்டியாவை விளையாட விடாமல் செய்த தினேஷ் கார்த்திக்கை டுவிட்டரில் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். #NZvIND
  நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

  விஜய் சங்கர் 28 பந்தில 43, ரிஷப் பந்த் 12 பந்தில் 28, ஹர்திக் பாண்டியா 11 பந்தில் 21 ரன்கள் விளாசினர். டோனி 16-வது ஓவரின் 2-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டோனி ஆட்டமிழக்கும்போது கடைசி 28 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது.  7-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்தி உடன் இணைந்து குருணால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது. தினேஷ் கார்த்திக் - குருணால் பாண்டியா 22 பந்தில் 52 ரன்கள் குவித்ததால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

  அப்போது தினேஷ் கார்த்திக் 11 பந்தில் 24 ரன்னுடனும், குருணால் பாண்டியா 12 பந்தில் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள்தானே, இந்தியா வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நம்பினர்.  முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் இல்லை. அடுத்த பந்தை தூக்கியடித்தார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படவில்லை. ஆனால் ஈசியாக ஒரு ரன் எடுத்திருக்கலாம். குருணால் பாண்டியா ‘ஸ்ட்ரைக்கர்’ க்ரீஸ் நோக்கி ஓடினார். ஆனால் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க வேண்டாம் என்று குருணால் பாண்டியாவை தடுத்தார்.

  இதனால் குருணால் பாண்டியா விரக்தியடைந்தார். ரசிகர்களுடன் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், குருணால் பாண்டியா ஏற்கனவே 19-வது ஓவரின் கடைசி பந்தில் இமாலய சிக்ஸ் விளாசியிருந்தார். இதனால் அதிக நம்பிக்கையில் இருந்தார்.

  3-வது பந்தில் ஒரு ஓடாததால் இந்தியாவுக்கு கடைசி 3 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 3 பந்தையும் பவுண்டரிக்கு வெளியே அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 4-வது பந்தும் பேட்டிங் சரியாக படவில்லை. ஆனால், இந்த முறை தினேஷ் கார்த்திக் ஒரு ரன் அடித்தார். கடைசி இரண்டு பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை குருணால் பாண்டியா தூக்கியடிக்க முயன்றார். ஆனால் ஒரு ரன்தான் கிடைத்தது. அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

  கடைசி பந்தில் 12 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், வைடு மற்றும் சிக்ஸ் மூலம் இந்தியாவிற்கு 7 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  தினேஷ் கார்த்திக் அதீத நம்பிக்கையில் இருந்ததால் அவரை ‘திருவாளர் அதீத நம்பிக்கை’ என டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.

  ஒருவேளை 3-வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுக்கு ஓடியிருந்து, 4-வது பந்தில் குருணால் பாண்டியா சிக்ஸ் அடித்திருந்தால், இந்தியாவுக்கு கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். இப்படி நிகழ்ந்திருந்தால் நியூசிலாந்து பந்து வீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பார். இதனால் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்னை 3-வது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்ய சொன்னது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். #NZvIND
  இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அதன்பின் இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் பங்கேற்றார். நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடினார்.

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விஜய் சங்கர் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். அந்த இடத்தில் அவர் சிறப்பாக விளையாடினார். முதல் போட்டியில் 23 ரன்கள் அடித்த அவர், கடைசி போட்டியில் 28 பந்தில் 43 ரன்கள் விளாசி அனைவரது பார்வையையும் ஈர்த்தார்.

  இந்நிலையில் இந்தியா திரும்பியுள்ள அவர், அணி நிர்வாகம் 3-வது இடத்தில் களம் இறக்கியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘அணி நிர்வாகம் என்னை 3-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யுங்கள் என்று கூறியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விளையாடுவதில் கவனம் செலுத்தினேன். இந்தியா போன்ற அணிக்காக விளையாடும்போது, எல்லா விதங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும்.

  ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர் முழுவதில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன். நான் அதிக அளவில் பந்து வீசவில்லை. ஆனால், வித்தியாசமான சூழ்நிலைகளில் பந்து வீச கற்றுக் கொண்டேன். விராட் கோலி, ரோகித் சர்மா, டோனி எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்தேன். அதில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.  என்னைப் பொறுத்தவரையில் கடைசி போட்டி கூட கற்றுக் கொள்வதற்கான அனுபவம்தான். இன்னொரு பவுண்டரியை விட ஒன்று அல்லது இரண்டு ரன்களுக்கு முயற்சி செய்திருக்கனும். நான் எப்போதும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்பிவேன். அணிக்காக என்னால் வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்றால், தானாகவே அது என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை வளர்க்கும்.

  என்னைப் பொறுத்தவரைக்கும், முக்கியமான விஷயம், வித்தியாசமான சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறி தொடர்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்ததன் மூலம் இந்தியாவின் தொடர் சாதனை முடிவிற்கு வந்துள்ளது. #NZIND #TeamIndia
  நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

  இந்தத் தோல்வியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பபு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனை முடிவிற்கு வந்தது.

  இதற்கு முன் இந்தியா 9 இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து வந்தது. நியூசிலாந்து மிகக்குறைவான ரன்னில் வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும்.

  இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்தின் 2-வது மிகக்குறைந்த ரன் வெற்றி இதுவாகும். கடந்த 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், 2012-ல் இந்தியாவிற்கு எதிராக 1 ரன்னிலும், 2009-ல் இலங்கைக்கு எதிராக 3 ரன்னிலும் வெற்றிப் பெற்றிருந்தது.

  இந்த தோல்வியில் மூலம் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 8 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. எந்தவொரு அணிக்கெதிராகவும் இந்தியா இந்த எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்ததில்லை.

  குருணால் பாண்டியா 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.

  கொலின் முன்ரோ டி20 கிரிக்கெட்டில் 92 சிக்சர்கள் விளாசி, சர்வதேச அளிவில் 4-வது இடத்தையும், நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

  நேற்றைய போட்டியின் மூலம் எம்எஸ் டோனி 300-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோகித் சர்மா 298 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் தொடரையும் பறிகொடுத்தது. #NZvIND #newzealandwin
  நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

  இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.

  அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

  அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

  இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

  இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது. 

  பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. #NZvIND  #newzealandwin
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. #NZvIND
  ஹாமில்டன்:

  இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி பெற்றது. இதனால் இந்த 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

  இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.  கடந்த பத்து 20 ஓவர் போட்டித் தொடர்களை இழக்காத இந்திய அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் ஆவலில் உள்ளது. 2-வது ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல தொடக்கம் (79 ரன்) அமைத்து தந்ததும், பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசியதும் வெற்றியை எளிதாக்கியது. அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால், தொடரை வசப்படுத்த முடியும். இந்திய அணியில் அனேகமாக தினேஷ் கார்த்திக் வெளியே உட்கார வைக்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என்று தெரிகிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் 2 சிக்சர் எடுத்தால், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது அவர் 102 சிக்சர் அடித்துள்ளார்.

  இந்திய அணி ஹாமில்டனில் 4-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 92 ரன்னில் சுருண்டதை யாரும் மறந்து விட முடியாது. அதே மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடப்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

  நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சிலும் நல்ல நிலையிலேயே உள்ளது. ஆனால் ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதில் சீரான போக்கு இல்லை. அது தான் அவர்களின் பலவீனமும் கூட. ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்து விட்ட நிலையில், 20 ஓவர் தொடரை வென்று அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் அந்த அணி வீரர்கள் இருப்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

  ஹாமில்டனில் இதுவரை எட்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் நியூசிலாந்து அணி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்திய அணி இங்கு 20 ஓவர் போட்டியில் ஆட இருப்பது இதுவே முதல்முறையாகும்.

  இரண்டாவது 20 ஓவர் போட்டி நடந்த ஆக்லாந்து ஸ்டேடியத்தை விட இது சற்று பெரியது. ஆனாலும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், வேகமான அவுட் பீல்டு ஆகியவற்றை பார்க்கும் போது இங்கு ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

  போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

  இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல்.

  நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, பிளைர் டிக்னெர்.

  இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 மற்றும் டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

  முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் சந்திக்கின்றன.

  முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்குகிறது.#NZvIND
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எங்களது திட்டத்தை சரியாக வெளிப்படுத்தியதால் வெற்றி கிடைத்தது என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #NZvIND
  நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

  பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 50 ரன்னும், தவான் 30 ரன்னும் அடித்தனர். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும், டோனி ஆட்டமிழக்காமல் 20 ரன்களும் சேர்த்தனர். இதனால் இந்தியா 18.5 ஓவரில் 162 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  குருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. கடைசி போட்டி நாளைமறுநாள் ஹாமில்டனில் நடக்கிறது.

  இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த வெற்றி குறித்து கூறுகையில் ‘‘முதலில் சிறப்பாக பந்து வீசிய பின், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட விதம் மகிழ்ச்சியளிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் எங்களது திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. ஆனால், இந்த போட்டியில் சரியாக செயல்படுத்தினோம். அதற்கான வெகுமதி இன்று எங்களுக்கு கிடைத்தது.

  நமது தவறுகளை புரிந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. தெளிவான மனநிலையுடன் வீரர்கள் களம் இறங்கி விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். தரமான அணியை நாங்கள் பெற்றுள்ளோம். அடுத்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று எப்படி விளையாடினோமோ, அதைபோல் கடைசி போட்டியிலும் விளையாடுவோம் என்று நம்புகிறேன்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvIND
  நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.

  தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - தவான் ஜோடி 9.2 ஓவரில் 79 ரன்கள் குவித்தது.


  3 விக்கெட் வீழ்த்திய குருணால் பாண்டியா

  அடுத்து தவான் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். தவான் 31 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் 8 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.

  4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்தியா 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


  அரைசதம் அடித்த ரோகித் சர்மா

  ரிஷப் பந்த் 28 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தும், எம்எஸ் டோனி 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தும்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 1-1 என சமநிலை செய்தது. 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளைமறுநாள் (10-ந்தேதி) நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா 28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். #RohitSharma
  ஆக்லாந்து:

  நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது.

  தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

  ரோகித் சர்மா 35 ரன்னைத் தொட்டபோது சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்திருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2272) பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்தார்.

  இந்த போட்டிக்கு முன் ரோகித் சர்மா 2238 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்ததன் மூலம் 2288 ரன்கள் சேர்த்துள்ளார். ஹிட்மேன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2263 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
  நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

  செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தலா 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா துள்ளியமாக பந்து வீச கேன் வில்லியம்சன் 20 ரன்னிலும், மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

  இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்னுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராண்ட்ஹோம் 28 பந்தில் 4 சிக்சர், 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்தார். ராஸ் டெய்லர் 42 ரன்கள் சேர்த்தார். சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 3 ரன்னிலும ஆட்டமிழக்க நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

  இதனால் இந்தியாவிற்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குருணால் பாண்டியா 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறந்த பார்ட்னர்ஷிப் அமையாததுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தோல்வி குறித்து ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #NZvIND
  நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 219 ரன்கள் குவித்தது. பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழக்க இந்தியா 19.2 ஓவரில் 139 ரன்னில் சுருண்டது.

  இதனால் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்தத்தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘மூன்று துறைகளிலும் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். 200 ரன்களுக்கு மேற்பட்ட டார்கெட்டை சேஸிங் செய்வது எளிதான காரியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்.  மிகப்பெரிய இலக்கை விரட்டும்போது சிறந்த பார்ட்னர்ஷிப் இல்லை என்றால், அந்தப்பணி கடினமாகிவிடும். எங்கள் அணியில் 8 பேட்ஸ்மேன்கள் இருந்தனர். இதனால் நாங்கள் சேஸிங் செய்திருக்கனும். எங்களுக்கு ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அதில் தோற்றுவிட்டோம்’’ என்றார்.

  வெற்றி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘அனைத்துத் துறையிலும் சிறப்பான செயல்பாடு. செய்பெர்ட் சிறப்பாக விளையாடினார். பந்து வீச்சுத்துறை அபாரம். போர்டில் எங்களுக்கு போதுமான ரன்கள் இருந்தன.  என்றாலும், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் அபாரமாக இருந்தது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் எங்கள் அணியே வெற்றி பெற்றது. இந்த தொடர் முழுவதும நாங்கள் இந்த உத்வேகத்தை தொடர வேண்டும். எங்களால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 139-ல் சுருண்டு 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #NZvIND
  நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

  பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

  அடுத்து தவான் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியா 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கும்போது தவான் 28 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

  விஜய் சங்கர் 18 பந்தில் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 4 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 5 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

  டோனி 31 பந்தில் 39 ரன்களும், குருணால் பாண்டியா 18 பந்தில் 20 ரன்களும் அடிக்க இந்தியா 19.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  நியூசிலாந்து அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் பெர்குசன், சான்ட்னெர், சோதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் 8-ந்தேதி நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin