search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது 20 ஓவர் போட்டி இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்
    X

    2-வது 20 ஓவர் போட்டி இந்தியா-நியூசிலாந்து நாளை மோதல்

    • வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமாகும்.
    • நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது.

    மவுண்ட் மாங்கானு:

    இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக தேர்வு பெற்றுள்ளனர்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் மவுண்ட் மாங்கானுவில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது. இதனால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமாகும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    Next Story
    ×