search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? நாளை கடைசி 20 ஓவர் ஆட்டம்
    X

    நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? நாளை கடைசி 20 ஓவர் ஆட்டம்

    • நியூசிலாந்து அணி நாளைய போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும்.
    • சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

    நேப்பியா:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    கடந்த 18-ந்தேதி இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    மவுண்ட் மாங்கானுவில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியாரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் நேற்றைய போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர்

    நியூசிலாந்து அணி நாளைய போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். சொந்த மண்ணில் விளையாடும் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    தோற்றால் அந்த அணி 20 ஓவர் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    Next Story
    ×