என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்ணனையாளர்"

    • 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்த தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணி வீரர்களும் இந்தியா மற்றும் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பயிற்சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. வர்ணனையாளர் (Commentator) குழுவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனான டெம்பா பவுமா இணைந்துள்ளார்.

    டி20 தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியல்:-

    ரவி சாஸ்திரி, நாசர் ஹுசைன், இயன் ஸ்மித், இயன் பிஷப், ஃபின்ச், கார்த்திக், சங்கக்கார, பத்ரீ, உத்தப்பா, பிராத்வைட், மோர்கன், வசிம் அக்ரம், கவாஸ்கர், ஹைடன், ரமீஸ் ராஜா, ஸ்டெய்ன், அதர்டன், வக்கார், சைமன் டவுல், பொல்லாக், கேட்டி மார்ட்டின், ஹர்ஷா, மும்பெலோ மபாங்வா, நடாலி ஜெர்மானோஸ், டேனி மோரிசன், ஆலன் வில்கின்ஸ், இயன் வார்டு, மார்க் ஹோவர்ட், நிக் நைட், அதர் அலி கான், காஸ் நைடூ, பாசித் கான், ரவுனக் கபூர், நயால் ஓ'பிரையன், பிரஸ்டன் மாம்சென், ஆண்ட்ரூ லியோனார்ட், ரஸ்ஸல் அர்னால்ட், ரோஷன் அபேசிங்க, ஏஞ்சலோ மேத்யூஸ், பவுமா.

    • கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.
    • கடந்த சில ஆண்டுகளில் ஐதராபாத், குஜராத் அணிக்காக கேன் வில்லியம்சன் ஆடியுள்ளார்.

    நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார். கடந்த சில ஆண்டுகளில் அவர் ஐதராபாத், குஜராத் அணிக்காக ஆடியுள்ளார்.

    ஆனால் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் வரும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் வர்ணனை செய்ய உள்ளார்

    இதன்மூலம் கிரிக்கெட்டில் முதல் முறையாக வர்ணனையாளராக கேன் வில்லியம்சன் அறிமுகமாகிறார் 

    • 9-வது டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.
    • இந்தத் தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழுவை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. அதில் ஐ.பி.எல். தொடரில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பல டி20 உலகக் கோப்பை தொடர்களில் வீரராக களமிறங்கிய அவர், தற்போது வர்ணைனையாளர் என்ற புதிய அவதாரத்துடன் நடப்பு தொடரில் பங்கேற்க உள்ளார்.

    தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பை தொடரில் வர்ணனை செய்யப்போவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×