என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஹாட்ரிக் தோல்வி எதிரொலி: புள்ளிப்பட்டியலில் கடும் சரிவை சந்தித்த சி.எஸ்.கே.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது.
- பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
சண்டிகரில் நேற்று நடந்த 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த டெல்லி அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
மற்ற இடங்களில் தலா 2 வெற்றி பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 3-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 4-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-வது இடத்திலும் உள்ளன
தலா ஒரு வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10-வது இடத்திலும் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹாட்ரிக் தோல்வி எதிரொலியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள ரசிகர்கள் சென்னை அணி இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.






