என் மலர்
நீங்கள் தேடியது "CWC 2023"
- காயத்தால் விளையாடாமல் இருக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக அணியில் இடம் பிடித்துள்ளார்
- வீரருக்கு அவரது குடும்பம்தான் முதல் ரசிகர் என்றால் மிகையாகாது
இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 19-ந்தேதி தொடர் நடைபெற இருக்கிறது.
இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும், தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொதுவாக வீரர்கள் அறிவிப்பு டுவிட்டர் மூலம் அறிவிக்கப்படும். அல்லது பத்திரிகையாளர் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கிரிக்கெட் போர்டால் அறிவிக்கப்படும்.
ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு, தங்களது அணி வீரர்கள் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. அவர்கள் சிறந்த ரசிகர்களால் அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது குடும்பத்தினர்தான் முதல் ரசிகர் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள வீரர்கள் அவர்களும் குழந்தைகளின் மழலை குரல்களிலும், மனைவி மட்டும் இருப்பவர்கள் மனைவி மூலமாகவும், காதலி இருப்பவர்கள் அவர்கள் மூலமாகவும், மனைவி மற்றும் காதலி இல்லாத வீரர்கள் அவர்களின் பெற்றோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- ஆசிய கோப்பை போட்டியின்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்தனர்
- இரண்டு பேர் காயம் குணமடைந்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.
உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.
பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.
- 115 பந்தில் 95 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது
- விராட் கோலி 116 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கே.எல். ராகுல் 97 ரன்கள் அடித்து சதம் அடிக்க முடியாமல் போனது. அவர் 91 ரன்கள் இருக்கும்போது, இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அவர் சதம் அடிக்க 9 ரன்கள் தேவைப்பட்டது.
41-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் முதலில் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும். ஸ்கோர் சமன் ஆகிவிடும். அதன்பின் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அதோடு சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என கே.எல். ராகுல் நினைத்தார்.
ஆனால், 2-வது பந்தை ஆஃப் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரிக்கு போகும் என நினைத்தார். ஆனால், லைனை தாண்டி சிக்ஸ் சென்று விட்டது. இந்தியா 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 97 ரன்கள் எடுத்தார்.
சிக்ஸ் சென்றதும், அடடே... சிக்ஸ் போய்விட்டதே... என கவலையில் அப்படியே உட்கார்ந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா உடன் வெற்றியை பகிர்ந்து கொண்டார்.
இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்த நிலையில், கே.எல். ராகுல்- விராட் கோலி ஜோடி அபாரமான விளையாடியது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் சிறந்த பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 199 ரன்களே அடித்தது
- விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடி இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது
உலக கோப்பை தொடரில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதற்கு முன் சென்னையில் ஆஸ்திரேலியா மூன்று முறை உலக கோப்பை போட்டியில் விளையாடியுள்ளது. அந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்து, முதல்முறையாக சென்னை மண்ணில் தோல்வியை தழுவியுள்ளது.
மேலும் ஐசிசி உலக கோப்பையில், ஆஸ்திரேலியா தொடக்க போட்டியில் கடந்த 2003-ல் இருந்து தோல்வியை சந்திக்காமல் வந்தது. நேற்று தோல்வியை சந்தித்துள்ளது. உலக கோப்பையில் 19 முறை இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளது. இது அந்த அணியின் 4-வது தோல்வி இதுவாகும்.
- மிட்செல் மார்ஷ் எளிதான கேட்சை பிடிக்க தவறினார்
- விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடி 165 ரன்கள் குவித்தது
உலக கோப்பை தொடரில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார்.
விராட் கோலி 12 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஹேசில்வுட் பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்து எட்ஜ் ஆகி மேலே எழும்பியது. எளிதாக வந்த கேட்சை, மிட்செல் மார்ஷ் பிடிக்க தவறினார். இதனால் விராட் கோலி 12 ரன்னில் இருந்து தப்பித்தார்.
பின்னர் அபாரமாக விளையாடி 116 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. மேலும், விராட் கோலி இரண்டு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
நேற்றைய போட்டியுடன் 64 இன்னிங்சில் (ஒருநாள் மற்றும் டி20) 2785 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஐசிசி தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 2719 ரன்களும், ரோகித் சர்மா 2422 ரன்களும், யுவராஜ் சிங் 1707 ரன்களும், கங்குலி 1671 ரன்களும் அடித்துள்ளனர்.
மேலும், தொடக்க வீரராக களம் இறங்காமல் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 113 முறை விராட் கோலி 50 ரன்களை தாண்டியுள்ளார். சங்ககாரா 112 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 109 முறையும், கல்லிஸ் 102 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
- மிட்செல் மார்ஷ் அடித்த பந்தை விராட் கோலி அபாரமாக பிடித்தார்
- இரண்டு கேட்ச் பிடித்து, பீல்டிங்கிலும் அசத்தினார்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது ஓவரின் 2-வது பந்தை மார்ஷ் அடித்தபோது, பந்தில் ஸ்லிப் திசையில் சீறிச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலி டைவ் அடித்து பிடித்தார். மேலும் ஒரு கேட்ச் பிடித்தார்.
போட்டியில் இந்தியாவின் பீல்டிங் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரருக்கு இந்திய அணி சார்பில் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப் தங்கப் பதக்கம் வென்றார்.
அவரை சக வீரர்கள் பாராட்ட, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது போல் விராட் கோலி, போஸ் கொடுத்து அசத்தினார்.
- ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாகவே காய்ச்சலால் பாதிப்பு
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தபோது, இந்திய வீரர் சுப்மான் கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு உறுதியானது. இதனால் முதல் போட்டியில் விளையாடவில்லை. நேற்று இந்திய அணி டெல்லி புறப்பட்டு சென்றது. நாளை டெல்லியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியிலும் சுப்மான் கில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய வீரர்களுடன் டெல்லி பயணிக்கவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சாதகமான ரிசல்ட் வந்து, உடல்நிலை சரியானால் நேரடியாக அகமதாபாத் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை சுப்மான் கில் வெளிப்படுத்தி வருகிறார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. சென்னையில் இந்திய அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது குறிப்பிடத்தக்கது.
சுப்மான் கில் இல்லாததால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கினார்.
- முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது
- பாகிஸ்தான் 2-வது வெற்றியை பெறும் வகையில் விளையாடும்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்திடம் தோல்வியடைந்திருந்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதேவேளையில் வங்காளதேசம் இங்கிலாந்துக்கு ஷாக் கொடுக்க நினைக்கும். இந்த போட்டி இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் நடைபெறுகிறது.
இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இதே மைதானம் என்பதால் வங்காளதேசத்திற்கு சற்று கூடுதல் அட்வான்டேஜ் ஆக இருக்கும்.
மதியம் 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தது. அதே உற்சாகத்துடன் இன்று இலங்கையை வீழ்த்த துடிக்கும்.
இலங்கை அணி முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்தாலும், இலங்கை 44.5 ஓவர்களில் 326 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த போட்டி பரபரப்பு, சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- 80 சதவீதம் குணமடைந்து விட்டதாக பிசிசிஐ மருத்துவக்குழு தகவல்
- இருந்தபோதிலும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை
இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது போட்டியிலும் ஆடவில்லை.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் காய்ச்சலில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை அடைவதற்கு சுப்மன் கில்லுக்கு மேலும் ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக 14-ந்தேதி நடைபெறும் ஆட்டத்திலும், வங்காளதேசத்துக்கு எதிராக 19-ந்தேதி நடைபெறும் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் என கருதப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத் புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
இதற்கிடையே ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் பேக்-அப் வீரராக அழைக்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
- தென்ஆப்பிரிக்கா முதல் போட்டியில் இலங்கையை வென்றிருந்தது
- ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியடைந்து இருந்தது
13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகியவை புள்ளி எதுவும் பெறவில்லை.
டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை போட்டியின் 10-வது லீக் ஆட்டம் லக்னோவில் நாளை (12-ந்தேதி) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா- கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 102 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அந்த அணி 428 ரன் குவித்து சாதனை படைத்தது. குயின்டன் டி காக், வான்டர் டூசன் உள்ளிட்ட 3 வீரர்கள் சதம் அடித்தனர். மார்க்ராம் அதிவேகத்தில் (49 பந்து) சதம் அடித்து சாதனை படைத்தார்.
தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை தொடருக்கு முன்பு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இந்தப் போட்டியில் அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. சுமித், வார்னர் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்தனர். அதே நேரத்தில் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். உலக கோப்பையின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக இருக்கும்.
- ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம்.
- இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறிவரும் வேளையில் இந்திய அணியின் அடுத்த எம்.எஸ் தோனி யார்? என்பது குறித்து முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை கூறிள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எப்பொழுதெல்லாம் இந்திய அணி வீரர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களை சந்தித்து பேசுகிறேன். அப்படி பேசும் போது தற்போதுள்ள இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.
ஏனெனில் ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம். அதோடு சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஓய்வறையில் அனைவரையும் சரியான மனநிலையுடன் கலகலப்பாக வைத்துக் கொள்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவரது தலைமை பண்புகளை நான் டோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் டோனி ரோகித்தான்.
ஏனெனில் ரோகித் அமைதியானவர், அதோடு யார் பேசினாலும் காது கொடுத்து கேட்கக் கூடியவர். அதுமட்டுமின்றி வீரர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து அணியை வழி நடத்தக்கூடிய ஒரு நல்ல தலைவர். இதெல்லாம் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக அவர் ஓய்வறையில் வீரர்களை சரியாக வைத்துக் கொள்வதும் அவர்களிடமிருந்து மரியாதை பெறுவதுமே அவர் அடுத்த டோனி என்பதை நினைக்க வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புவார்கள்
- விராட் கோலி என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் புனே நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா, இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், வங்காளதேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாது.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது வங்காளதேச அணியினர் அதிக உத்வேகத்துடன் விளையாடுவார்கள். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம் கூறியதாவது:-
சர்வதேச அளவில் சில பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புவார்கள். ஏனென்றால், அது அவர்களுக்கு உந்துதலாக இருக்கும். ஆகவே, நான் ஒருபோதும் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யமாட்டேன். ஏனென்றால் அவர் உந்துதல் பெற்றுவிடுவார். எங்களுடைய பந்து வீச்சாளர்களிடம், எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ, அவ்வளவு விரைவாக அவரை வீழ்த்துமாறு கூறுவேன்.
விராட் கோலியை எதிர்த்து நான் விளையாடும் போதெல்லாம், நான் பேட்டிங் செய்ய செல்லும்போது அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார். ஏனென்றால், அவர் உண்மையிலேயே ஒரு போட்டியாளர். ஒரு போட்டியை கூட இழக்க விரும்பமாட்டார். அவருக்கும் எனக்கும் இடையிலான மோதல், இந்தியாவையும் எதிர்த்து விளையாடும் சவால் ஆகியவற்றை நான் மிகவும் விரும்புவேன்.
இவ்வாறு ரஹிம் தெரிவித்துள்ளார்.






