என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ICC HALL OF FAME-ல் ரபாடா விரைவில் இணைந்துவிடுவார் - கேப்டன் பவுமா புகழாரம்
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
- ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story