என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்டில் தோல்வியே இல்லை.. 104 ஆண்டுகால சாதனையை முறியடித்த பவுமா
    X

    டெஸ்டில் தோல்வியே இல்லை.. 104 ஆண்டுகால சாதனையை முறியடித்த பவுமா

    • பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார்.
    • டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    லண்டன்:

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னும், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

    இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன் இலக்காக இருந்தது. தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டை இழந்து இந்த ரன்னை எடுத்தது. தொடக்க வீரர் மர்க்ராம் 136 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 27 ஆண்டுகளுக்க பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. கோப்பை கிடைத்துள்ளது. கடைசியாக 1998-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு பிறகு தற்போது தான் அந்த அணி ஐ.சி.சி. பட்டத்தை வென்றுள்ளது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா புதிய வரலாறு படைத்தார். அதோடு அவர் கேப்டன் பதவியிலும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார். அவர் தலைமையில் 10 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றி கிடைத்தது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் கூட தோற்கவில்லை. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    அவர் 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். 1920-21 ஆண்டுகளில் தோல்வியை தழுவாமல் 8 டெஸ்டில் வெற்றி பெற்றார். பவுமா தோல்வியை சந்திக்காமல் 9 டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

    Next Story
    ×