என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கடந்த கால இந்திய அணியாக இருந்திருந்தால்.., கடைசி டெஸ்டில் பும்ரா விளையாடாதது குறித்து அஸ்வின் கருத்து..!
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்னதாகவே அறிவிப்பு.
- முதல் டெஸ்டில் விளையாடிய பும்ரா, அதன்பின் 3ஆவது மற்றும் 4ஆவது போட்டியில் பங்கேற்றார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 2-2 என டிரா செய்ய முடியும் என்ற நிலையில் கூட பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என உறுதியாக கூறப்பட்டது. முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் 3ஆவது மற்றும் 4ஆவது போட்டியில் விளையாடினார்.
4ஆவது போட்டிக்கும் 5ஆவது போட்டிக்கும் இடையில் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பும்ரா ஓய்வு குறித்து அஸ்வின் கூறுகையில் "இது கடந்த கால இந்திய அணியாக இருந்திருந்தால், பும்ராவை இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாட வற்புறுத்தியிருப்பார்கள். இப்போது கூட, அணி நிர்வாகம் இதைப் பார்த்திருக்கலாம். ஆனால் பும்ராவின் பார்வையில், இது ஒரு சரியான முடிவு" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தொடர் முழுவதும் விளையாட தகுதியாக இருந்தால் மட்டுமே இனிமேல் பும்ராவை டெஸ்ட் தொடரில் சேர்க்க இருப்பதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






