என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கடைசி T20 போட்டி- 100 விக்கெட் சாதனையை நோக்கி பும்ரா
- இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
- மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ் பேனில் இன்று பிற்பகல் நடக்கிறது.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புதிய சாதனையை நோக்கி இருக்கிறார். அவர் இன்று ஒரு விக்கெட் எடுத்தால் 100-வது விக்கெட்டை தொடுவார். 31 வயதான அவர் 79 ஆட்டத்தில் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார்.
100-வது விக்கெட்டை எடுக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெறுகிறார். அர்ஷ் தீப் சிங் 105 விக்கெட்டுடன் (67 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். பும்ரா இந்த தொடரில் 3 விக்கெட்டே எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் 33 வீரர்கள் 100 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான் 182 விக்கெட்டுடன் முதல் இடத்தில் உள்ளார்.
டிம் சவுத்தி (நியூசி லாந்து) 164 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், முஷ்டா பிசுர் ரகுமான் (வங்காள தேசம்) 155 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.






