என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான என்னுடைய முதல் தேர்வு சாய் சுதர்சன்தான்..! ரவி சாஸ்திரி
    X

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான என்னுடைய முதல் தேர்வு சாய் சுதர்சன்தான்..! ரவி சாஸ்திரி

    • இளம் வீரரான சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக பார்க்கிறேன்.
    • அவர் ஒரு சிறந்த வீரர் போல் தெரிகிறார். என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும்.

    2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான (World Test Championship cycle) இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் 20ஆம் தேதி முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தொடரை இழந்திருந்தது. ஆஸ்திரேலியா மண்ணில் 1-3 என தோல்வியடைந்திருந்தது. இதற்குப்பின் இந்திய அணியின் தேர்வு எவ்வாறாக இருக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், தற்போதைய அணியில் இருப்பவர்களை தவிர வெளியில் இருந்து எடுப்பவர்களில் என்னுடைய தேர்வில் முதல் நபராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து்ளளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    இளம் வீரரான சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர் போல் தெரிகிறார். என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும். இங்கிலாந்தில் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இங்கிலாந்து சூழ்நிலையை நன்றாக தெரிந்தவர். அவருடைய டெக்னிக், அவர் விளையாடும் விதம், தற்போதைய அணிக்கு வெளியில் இருந்து வீரர்கள் தேவை என்று விரும்புபோதும் என்னுடைய முதன்மையான தேர்வு சாய் சுதர்சனாகத்தான் இருக்கும்.

    ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடிக்க முடியும். ஆனால் அதற்கு போட்டி நிலவும். ஒயிட்பால் கிரிக்கெட்டில் உறுதியாக இடம் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட் என வரும்போது மற்ற வீரர்கள் யார்? யார்? இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×