search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brendon McCullum"

    • இந்த டெஸ்ட் போட்டி எத்தனை நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது.
    • ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள்.

    இந்தியாவுக்கு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் எங்களது யுக்தி இந்தியாவில் சோதிக்கப்படும் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பிரண்டன் மெக்கல்லம் கூறியதாவது:-

    இந்திய தொடர் முழுவதும் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். நான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றபோது எங்களால் முடிந்த வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதுவே வெற்றியையும் தேடித் தந்தது.

    எங்களது அதிரடி பேட்டிங்கை, இந்தியாவுக்கு எதிராக அதுவும் இந்திய மண்ணில் சோதிப்பதை விட ஏதேனும் சிறப்பு இருக்கிறதா என்ன? இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே இது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த டெஸ்ட் போட்டி எத்தனை நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது.

    ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆஷஸ் கிரிக்கெட் போல் இந்த தொடரும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளை எடுப்பது மற்றும் எதிரணியைவிட குறைந்தது 1 ரன்னாவது கூடுதலாக எடுப்பது வெற்றியின் சாரம்சமாகும். எங்களது யுக்தி இந்த தொடரில் பரிசோதிக்கப்படும். இதுவே எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

    இவ்வாறு மெக்கல்லம் கூறினார்.

    • இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.
    • ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரது வற்புறுத்தலை ஏற்று டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2-2 என்று சமனில் முடிந்த இந்த தொடரின் கடைசி டெஸ்டில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் விடைபெற்றார்.

    அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை தொடர்ந்து டெஸ்டில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கும்படி பயிற்சியாளர் மெக்கல்லம் அவரை மீண்டும் கேட்டு இருந்தார். இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.

    இது குறித்து மொயீன் அலி கூறுகையில் 'இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனது முடிவு அவர்களுக்கு (ஸ்டோக்ஸ், மெக்கல்லம்) தெரியும். அற்புதமான ஆஷஸ் வெற்றியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்து விட்டேன்.

    எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்துவேன். 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடுவேன்' என்றார்.

    • சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை.
    • நான் கிரிக்கெட்டில் அதிக காலம் பயணம் செய்து விட்டேன்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தன்னை அணுகியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரொபர்ட் கியிடம் இருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தது. ஆனால் சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை. நான் கிரிக்கெட்டில் அதிக பயணம் செய்து விட்டேன். இப்போது என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க தொடங்கி இருக்கிறேன். இந்த நேரத்தில் இதிலிருந்து விலகி இருக்க விரும்பவில்லை.

    மெக்கல்லத்துக்கும் குடும்பம் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்து கொண்ட இது போன்ற பணிகளை செய்வது எனக்கு சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போதைய எங்களது அதிரடியான அணுகுமுறை சரியானது என்று நிரூபித்து காட்டியிருக்கிறோம்.
    • மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பர்மிங்காம்:

    பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் 281 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாளிலேயே 8 விக்கெட்டுடன் 'டிக்ளேர்' செய்தது விமர்சனத்திற்குள்ளானது. தொடர்ந்து ஆடியிருந்தால் மேலும் 30-40 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறினர். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி எச்சரிக்கையுடன் மிகவும் நிதானமாக விளையாடியது. கடைசி கட்டத்தில் மட்டும் கொஞ்சம் வேகமாக மட்டையை சுழற்றி வெற்றிக்கனியையும் பறித்தது.

    இந்த நிலையில் எஞ்சிய போட்டிகளிலும் தங்களது ஆக்ரோஷமான அணுகுமுறை தொடரும், அதை மாற்றப்போவதில்லை என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் எப்போதும் அணியை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். எதிரணியை நெருக்கடிக்குள்ளாக்கி அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக சில அதிரடியான முடிவுகளை மேற்கொள்கிறோம்.

    இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியினருக்கு அவர்களது அணுகுமுறையும், யுக்தியும் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஏனெனில் இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் எஞ்சிய போட்டிகளிலும் இதே போன்ற வியூகங்களை தொடருவார்கள் என்று நம்புகிறேன். அதனால் இந்த தொடர் இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கப்போகிறது.

    நாங்கள் விளையாடிய விதத்தில் தவறில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போதைய எங்களது அதிரடியான அணுகுமுறை சரியானது என்று நிரூபித்து காட்டியிருக்கிறோம். இந்த டெஸ்டில் சற்று அதிர்ஷ்டமும் இருந்திருந்தால் முடிவு எங்களுக்கு சாதகமாக மாறியிருக்கலாம். இரு அணிகளும் வெவ்வேறு பாணியில் விளையாடினாலும் பரபரப்பான இந்த டெஸ்டை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    களத்தில் எங்களது வீரர்கள் வெளிக்காட்டிய முயற்சியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதனால் லண்டன் லார்ட்ஸ் டெஸ்டுக்கு(28-ந்தேதி தொடக்கம்) நல்ல நம்பிக்கையுடன் செல்வோம். 2-வது டெஸ்டில் இன்னும் தீவிரமாகவே விளையாடுவோம்.

    விரலில் காயமடைந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி உடல்தகுதியுடன் இருந்தால் லார்ட்ஸ் டெஸ்டுக்கு தேர்வு செய்யப்படுவார். இன்னும் நாலைந்து நாட்கள் இருப்பதால் அதற்குள் காயம் குணமடைந்து விடும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு மெக்கல்லம் கூறினார்.

    மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் கடைசி வரை அவுட் ஆகவில்லை.
    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நடந்தது. முதல் போட்டிகளில் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் அணி, முதல் 2 போட்டிகளிலும் ஜெயித்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

    முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற அனைவருமே மோசமாக பேட்டிங் ஆடினர். பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் 99 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்சை முடித்து கொடுத்தார்.

    கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தும் ஒரு ரன் கூடுதலாக அடிக்க முடியாததால் அவரால் சதமடிக்க முடியவில்லை. தவானை தவிரவேறு யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணி அடித்தது. 144 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல்லில் ஒரு அணி அடித்த ஸ்கோரில் அதிகமான சதவிகித ரன்னை அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அடித்த ஸ்கோரில் (143), 69.23 சதவிகித ரன்னை தவான் ஒருவரேஅடித்தார்.

    இந்த பட்டியலில் பிரண்டன் மெக்கல்லம் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லின் முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் அடித்த 222 ரன்களில் 158 ரன்கள்(71.17%) மெக்கல்லம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லத்தின் நீண்டகால சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.
    • ஸ்டோக்ஸ் 33 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், நியூசிலாந்தின் ஸ்காட் குகெலிஜின் வீசிய இரண்டாவது இன்னிங்சின் 49-வது ஓவரில், ஸ்டோக்ஸ் மூன்றாவது பந்தை ஃபைன் லெக் திசையில் சிக்சருக்கு விளாசினார்.

    இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லத்தின் நீண்டகால சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.

    ஸ்டோக்ஸ் 33 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    90 டெஸ்ட் போட்டிகளில், ஸ்டோக்ஸ் 109 சிக்ஸர்கள் மற்றும் 36.00 சராசரியில் 12 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களுடன் மொத்தம் 5,652 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் அவரது சிறந்த ஸ்கோர் 258 ஆகும்.

    மறுபுறம், மெக்கல்லம் 101 டெஸ்டில் 107 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவர் 38.64 சராசரியில் 6,453 ரன்கள் எடுத்தார். அவர் 12 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் நீண்ட வடிவத்தில் 302 ரன்களுடன் சிறந்த ஸ்கோரைப் பெற்றுள்ளார்.

    கரிபியன் பிரீமியர் லீக்கில் மெக்கல்லம் மற்றும் டேரன் பிராவோ அதிரடியால் 212-ஐ சேஸிங் செய்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 9-வது ஆட்டம் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் அந்த்ரே பிளெட்சர், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிளெட்சர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் ரஹீம் கார்ன்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கார்ன்வால் 29 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


    கார்ன்வால்

    3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் கேப்டன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் 72 ரன்னும், பொல்லார்டு 23 பந்தில் 65 ரன்னும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க செயின்ட் லூசியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. பிரெண்டன் மெக்கல்லம் 42 பந்தில் 68 ரன்களும், டேரன் பிராவோ அவுட்டாகாமல் 36 பந்தில் 94 ரன்களும் விளாச 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
    2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது ஊக்க மருத்து சோதனையில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். #BrendonMcCullum #PositiveDrugTest #IPL2016

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது.

    இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2016-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். அந்த சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மெக்கல்லம் 36 பந்தில் 60 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியின் போது மெக்கல்லம் ஊக்க மருந்து சோதனைக்கு உட்கொள்ளப்பட்டார். அவரது சிறுநீர் மாதிரியில் சால்புடமோல் என்னும் மருந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மெக்கல்லம் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், அந்த ஊக்க மருத்து சோதனையில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் டெல்லியில் காற்றில் அதிக மாசு கலந்திருந்தது. தனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததால், அப்போது அதிக அளவிலான ஆஸ்துமா மருந்து எடுத்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே தனது சிறுநீர் மாதிரியில் சால்புடமோல் அளவு அதிகமாகியதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும் அந்த மருந்தை பயன்படுத்த ஏற்கனவே அனுமதி பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீதான ஊக்க மருந்து புகார் முடிவுக்கு வந்துள்ளது. #BrendonMcCullum #PositiveDrugTest #IPL2016
    ×