search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trinbago Knight Riders"

    கரிபியன் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. #CPLFinal #GAWvTKR
    டிரினிடாட்:

    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட கயானா அமேசான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது. கயானா சார்பில் லூக் ரோன்சி அதிகபட்சமாக 44 (35) ரன்களை குவித்தார். ட்ரின்பகோ சார்பில் கரி பியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



    148 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக தெனேஷ் ராம்டின், பிரண்டன் மிக்கல்லம் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களை குவித்திருந்த நிலையில், 7-வது ஓவரை கிறிஸ் கிரீன் வீசினார். அதை எதிர்கொண்ட மெக்கல்லம் பந்தை தூக்கி அடிக்க டெல்போர்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய கொலின் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 12-வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீச 24 (30) ரன்களுடன் தெனேஷ் ராம்டின் வெளியேறினார். அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற கொலின் முன்ரோ 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 68 (39) ரன்களை சேர்த்தார். டேரன் பிராவோ காயம் காரணமாக 4 ரன்களில் ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார்.
    கடைசியில் 17.3 வெற்றி இலக்கை எட்டிய ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றது. #CPLFinal #CPL2018 #GAWvTKR 

    கரிபியன் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் ட்ரின்பகோ அணி வெற்றி பெற 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கயானா அமேசான் அணி. #CPL #GAWvTKR
    டிரினிடாட்:

    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று அதிகாலை தொடங்கியது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கயானா அமேசான் வாரியர்சின் தொடக்க வீரர்களாக கேமரூன் டெல்போர்ட், லூக் ரோஞ்சி ஆகியோர் களமிறங்கினர்.

    ட்ரின்பகோ அணியின் அலி கான் முதல் பந்தை வீச, கேமரூன் டெல்போர்ட் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார்.



    அவரை தொடர்ந்து இறங்கிய ஷிம்ரோன் ஹெட்மையர் நிதானமாக ஆடினர். இருவரும் பொறுமையாக ஆடவே இந்த ஜோடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 52 ஆக இருந்தபோது ஹெட்மையர் அவுட்டாகினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

    ட்ரின்பகோ அணி சார்பில் காரி பியர்ரெ 3 விக்கெட்டும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 148 ரன்களை இலக்காக கொண்டு ட்ரின்பகோ அணி விளையாடி வருகிறது. #CPL #GAWvTKR
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் கொலின் முன்றோ 56 பந்தில் 90 ரன்கள் குவிக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றியை ருசித்தது. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் கொலின் முன்றோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தீன் 36 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். இருவரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.



    பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் வாரியர்ஸ் களம் இறங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கயானா அமேசான் வாரியர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

    இதனால் கயானா அமேசான் வாரியர்ஸ் 17.4 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் கெய்ல் தலைமையிலான அணியை 46 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #ENGvIND
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி வெயின் பிராவோ அணி முதலில் களம் இறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 6 ரன்னிலும், கிறிஸ் லின் 18 ரன்னி்லும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கொலின் முன்றோ (50 பந்தில் 76 ரன்கள்- நாட்அவுட்), பிராண்டன் மெக்கல்லம் (33 பந்தில் 35), வெயின் பிராவோ (11 பந்தில் 37 ரன்கள்- நாட்அவுட்- 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பிராவோ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிறிஸ் கெய்ல் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். எவின் லெவிஸ் 52 ரன்கள் சேர்த்தார்.


    கொலின் முன்றோ

    அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இதனால் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 7 போட்டியில் 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி மூலம் 10 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் மெக்கல்லம் மற்றும் டேரன் பிராவோ அதிரடியால் 212-ஐ சேஸிங் செய்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 9-வது ஆட்டம் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் அந்த்ரே பிளெட்சர், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிளெட்சர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் ரஹீம் கார்ன்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கார்ன்வால் 29 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


    கார்ன்வால்

    3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் கேப்டன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் 72 ரன்னும், பொல்லார்டு 23 பந்தில் 65 ரன்னும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க செயின்ட் லூசியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. பிரெண்டன் மெக்கல்லம் 42 பந்தில் 68 ரன்களும், டேரன் பிராவோ அவுட்டாகாமல் 36 பந்தில் 94 ரன்களும் விளாச 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
    கரிபியின் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் வார்னர் மற்றும் பொல்லார்டு சொதப்பலால் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் தோல்வியை சந்தித்தது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 2018 சீசன் நேற்று தொடங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற செயின்ட் லூசியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் லின் 8 ரன்னிலும், சுனில் நரைன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த கொலின் முன்றோ 48 பந்தில் 68 ரன்கள் குவித்தார். பிராண்டன் மெக்கல்லம் 13 ரன்னில் வெளியேற விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் 27 பந்தில் 50 ரன்கள் அடிக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

    பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் அந்த்ரே பிளெட்சர், டேவிட் வார்னர் ஆகியோர் தொடங்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிளெட்சர் 11 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார். ஆனால் முதன்முறையாக சிபிஎல் தொடரில் களம் இறங்கிய வார்னர் 9 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


    கொலின் முன்றோ

    அதன்பின் வந்த லென்டில் சிம்மன்ஸ், கார்ன்வால், மார்க் சேப்மான் சொற்ப ரன்களில் வெளியே செயின்ட் லூசியா அணி தடுமாறியது.

    கேப்டனும், அதிரடி வீரரும் ஆன பொல்லார்டு 27 பந்துகளை சந்தித்து 12 ரன்னில் வெளியேற 17.3 ஓவரில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெயின் பிராவோ 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
    ×