search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St Kitts and Nevis Patriots"

    கயானாவில் நடைபெற்ற கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ஜமைக்காவை வெளியேற்றியது செயிண்ட் கிட்ஸ் அணி. #CPL2018
    மேற்கிந்திய தீவில் உள்ள கயானாவில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று நடைபெற்றது.
    இதில் கிறிஸ் கெயில் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் மற்றும் ஆண்ட்ரு ரசல் தலைமையிலான ஜமைக்கா தலைவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, ஜமைக்கா தலைவாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 63 பந்துகளில் 103 ரன்னில் அவுட்டானார். அவரை தவிர மற்ற யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜமைக்கா தலைவாஸ் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயிண்ட் கிட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆண்டன் டேவ்சிச் 23 பந்தில் 50 ரன்கள் அடித்து வெளியேறினார்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காவிட்டாலும் பவுண்டரிகள், சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியாக, செயிண்ட் கிட்ஸ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆண்டன் டேவ்சிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜமைக்கா அணி தொடரில் இருந்து வெளியேறியது. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் கெய்ல் தலைமையிலான அணியை 46 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #ENGvIND
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி வெயின் பிராவோ அணி முதலில் களம் இறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 6 ரன்னிலும், கிறிஸ் லின் 18 ரன்னி்லும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கொலின் முன்றோ (50 பந்தில் 76 ரன்கள்- நாட்அவுட்), பிராண்டன் மெக்கல்லம் (33 பந்தில் 35), வெயின் பிராவோ (11 பந்தில் 37 ரன்கள்- நாட்அவுட்- 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பிராவோ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிறிஸ் கெய்ல் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். எவின் லெவிஸ் 52 ரன்கள் சேர்த்தார்.


    கொலின் முன்றோ

    அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இதனால் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 7 போட்டியில் 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி மூலம் 10 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அணி கயானா அமேசானிடம் தோல்வியைத் தழுவியது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக்கின் 19-வது ஆட்டம் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இதில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் - கயானா அமேசான் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கயானா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 22 பந்தில் 28 ரன்களும், கிறிஸ் கெய்ல் 27 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த அன்டோன் டேவ்சிச் 35 ரன்களும், பென் கட்டிங் 19 ரன்களும் அடிக்க செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. கயானா அணி சார்பில் இம்ரான் தாஹிர் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் வெளியேற வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர் 20 பந்தில் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து கயானா அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, தோல்வியின் மூலம் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. கயானா 6-ல் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு அணியை 69 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது கிறிஸ் கெய்ல் அணி. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கிறிஸ் கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பொல்லார்டு அணி 12.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 69 ரன்னில் சுருண்டது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்டும், மெஹ்முதுல்லா, சந்தீப் லாமிச்சேன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    தாமஸ்

    பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 7.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் செயின்ட் லூசியா 6 போட்டியில் ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் கயானா அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்விருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CPL2018
    வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    செயின்ட் கிட்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது கயானா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பாகிஸ்தானின் சோஹைல் தன்விர் 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் பென் கட்டிங் இமாலய சிக்ஸ் ஒன்று விளாசினார். சிக்ஸிற்கு அடுத்த பந்தில் களீன் போல்டானார்.



    இதனால் தன்வீர் தனது இரண்டு கைகளின் நடுவிரல்களை நீட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தினார். பிறர் மனதை புண்படும் வகையில் அறுவறுக்கத்தக்க வகையில் சைகை காட்டிய தன்விருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக் கிறிஸ் கெய்லின் செயின்ட் கிட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசான் வார்யர்ஸ் வீழ்த்தியது. #CPL2018 #Gayle
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் - சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சோயிப் மாலிக் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல் - எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    எவின் லெவிஸ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் கிறிஸ் கெய்ல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 65 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 86 ரன்கள் குவித்தார். கெய்ல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களே சேர்த்தது.



    பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் 9, 0 ரன்னில் வெளியேறினாலும், அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மையர் 45 பந்தில் ஆட்டமிழக்கால் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவிக்க, கயானா 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ×