search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPL 2018"

    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ், பார்படோஸ் டிரிடென்ட்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோதின. இதனடிப்படையில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், செயினிட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே ஒன்று முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறின.



    பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கள் முடிவில் கயானா அமேசான் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டி டிரினாடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜமைக்கா. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 லீக்கில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் களம் இறங்கியது. கேமரூன் டெல்போர்ட் (34), ஷிம்ரோன் ஹெட்மையர் (48), ஜேசன் முகமது (54) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது.


    இம்ரான் தாஹிர்

    பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா தல்லாவாஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் க்ளென் பிலிப்ஸ் (27), ஜான்சன் சார்லஸ் (25) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ராஸ் டெய்லர் (60), ரோவ்மேன் பொவேல் (55) ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி ஜமைக்கா அணி 18.1 ஓவரில் 177 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் கொலின் முன்றோ 56 பந்தில் 90 ரன்கள் குவிக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றியை ருசித்தது. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் கொலின் முன்றோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தீன் 36 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். இருவரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.



    பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் வாரியர்ஸ் களம் இறங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கயானா அமேசான் வாரியர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

    இதனால் கயானா அமேசான் வாரியர்ஸ் 17.4 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வந்த ஆடம் ஜம்பா சொந்த நாடு திரும்புவதால் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார். #CPL
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக அவர் ஆஸ்திரேலியா செல்கிறார்.

    இதனால் ஜமைக்கா அணி ஆடம் ஜம்பாவிற்குப் பதிலாக இஷ் சோதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்த சீசனில் ஜம்பா 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.


    ஆடம் ஜம்பா

    2013-ம் ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமான இஷ் சோதி ராஜஸ்தான் ராயல்ஸ், நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ், நட்டிங்காம்ஷைர், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக கரிபியன் ப்ரீமியர் லீக்கில் இருந்து விலகியுள்ளார். #CPL2018 #Smith
    வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டதால், இந்த தொடரில் முதன்முறையாக பங்கேற்று விளையாடி வந்தார்.



    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக ஸ்மித் விளையாட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் அணியில் இடம்பெறவில்லை. அடிவயிற்றில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. மேலும், இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். ஸ்மித் பார்படோஸ் அணிக்காக 7 போட்டியில் 185 ரன்கள் சேர்த்துள்ளார்.
    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் கெய்ல் தலைமையிலான அணியை 46 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #ENGvIND
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி வெயின் பிராவோ அணி முதலில் களம் இறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 6 ரன்னிலும், கிறிஸ் லின் 18 ரன்னி்லும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கொலின் முன்றோ (50 பந்தில் 76 ரன்கள்- நாட்அவுட்), பிராண்டன் மெக்கல்லம் (33 பந்தில் 35), வெயின் பிராவோ (11 பந்தில் 37 ரன்கள்- நாட்அவுட்- 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பிராவோ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிறிஸ் கெய்ல் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். எவின் லெவிஸ் 52 ரன்கள் சேர்த்தார்.


    கொலின் முன்றோ

    அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இதனால் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 7 போட்டியில் 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி மூலம் 10 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அணி கயானா அமேசானிடம் தோல்வியைத் தழுவியது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக்கின் 19-வது ஆட்டம் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இதில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் - கயானா அமேசான் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கயானா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 22 பந்தில் 28 ரன்களும், கிறிஸ் கெய்ல் 27 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த அன்டோன் டேவ்சிச் 35 ரன்களும், பென் கட்டிங் 19 ரன்களும் அடிக்க செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. கயானா அணி சார்பில் இம்ரான் தாஹிர் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் வெளியேற வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர் 20 பந்தில் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து கயானா அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, தோல்வியின் மூலம் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. கயானா 6-ல் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பார்படோஸ் டிரிடென்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் களம் இறங்கிய பார்படோஸ் டிரிடென்ட்ஸ் பேட்ஸ்மேன்கள் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கேரி பியர், வெயின் பிராவோ, பவத் அஹ்மது தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கிறிஸ் லின் (8), சுனில் நரைன் (13), கொலின் முன்றோ (14) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், பிராண்டன் மெக்கல்லம் 42 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 66 ரன்கள் விளாச டிரின்பானோ நைட் ரைடர்ஸ் 16.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்க 130 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 4 ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாதனைப் படைத்துள்ளார். #CPL2018
    வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் டிரிடென்ட்ஸ் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது முதல் ஓவரை பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே கிறிஸ் கெய்லை வீழ்த்தினார்.

    அதன்பின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வீசினார். அவர் பந்தை செயின்ட் கிட்ஸ் அணி பேட்ஸ்மேன்களால் தொடக்கூட முடியவில்லை. 23 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.



    இதனால் கடைசி பந்திலும் ரன் விட்டுக்கொடுக்காமல் சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் நான்கு ஓவரில் 3 மெய்டனுடன் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து (4-3-1-2) 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கு ஓவர் ஸ்பெல்லில் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பார்படோஸ் டிரிடென்ட்ஸ் #CPL2018
    கரிபியின் பிரீமியர் லீக் டி20 போட்டியில் புளோரிடாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜமைக்கா தல்லாவாஸ் - பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பார்படோஸ் அணியின் வெயின் ஸ்மித், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வெயின் ஸ்மித் 18 ரன்னிலும், ஹசிம் அம்லா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்ட்டின் கப்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    அதன்பின் வந்த ஸ்டீவன் ஸ்மித் 44 பந்தில் 63 ரன்களும், ஷாய் ஹோப் 35 பந்தில் 43 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் க்ளென் பிலிப்ஸ் 36 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 42 ரன்களும் அடித்து வெளியேறினார்கள். 3-வது வீரராக களம் இறங்கிய கென்னார் லெவிஸ் 17 ரன்னில் வெளியேறினார்.



    4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லருடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது ஜமைக்கா அணியின் வெற்றிக்கு 7.1 ஓவரில் (43 பந்தில்) 57 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இருவரும் கடைசி வரை களத்தில் நின்றும் 57 ரன்கள் அடிக்க முடியவில்லை. அவர்களால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பார்படோஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு அணியை 69 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது கிறிஸ் கெய்ல் அணி. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கிறிஸ் கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பொல்லார்டு அணி 12.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 69 ரன்னில் சுருண்டது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்டும், மெஹ்முதுல்லா, சந்தீப் லாமிச்சேன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    தாமஸ்

    பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 7.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் செயின்ட் லூசியா 6 போட்டியில் ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
    பிராவோ சகோதரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க டிரின்பாபோ நைட் ரைடர்ஸ் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 12-வது ஆட்டம் புளோரிடாவில் நேற்று நடைபெற்றது. இதில் ஜமைக்கா தல்லாவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டிரின்பாகோ பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜமைக்கா தல்லாவாஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பரும் ஆன க்ளென் பிலிப்ஸ் 55 பந்தில் 80 ரன்களும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 34 பந்தில் 72 ரன்களும் குவிக்க 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சுனில் நரைன் டக்அவுட்டிலும், கிறிஸ் லின் 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதன்பின் வந்த கொலின் முன்றோ 51 பந்தில் 67 ரன்கள் சேர்த்தார். டேரன் பிராவோ 35 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கேப்டனும் ஆல்ரவுண்டரும் ஆன வெயினி் பிராவோ 11 பந்தில் 5 சிக்சருடன் 36 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

    கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் ஜவோன் சியர்லெஸ் பவுண்டரி விளாச டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்து த்ரில் வெற்றி பெற்றது.
    ×