
அதன்படி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் கொலின் முன்றோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தீன் 36 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். இருவரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கயானா அமேசான் வாரியர்ஸ் களம் இறங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கயானா அமேசான் வாரியர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
இதனால் கயானா அமேசான் வாரியர்ஸ் 17.4 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.