search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darren Bravo"

    கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு வீசிய ஓரே ஓவரில் டேரன் பிராவோ ஐந்து சிக்ஸ் உள்பட 32 ரன்கள் குவித்து அசத்தினார். #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த லூசியா 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 15  ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி 5 ஓவரில், அதாவது 30 பந்தில் 85 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மெக்கல்லம், டேரன் பிராவோ களத்தில் இருந்தனர்.



    16-வது ஓவரை பொல்லார்டு வீசினார். டேரன் பிராவோ பந்தை எதிர்கொண்டார். முதல் நான்கு பந்துகளிலும் இமாலய சிக்ஸ் விளாசினார் பிராவோ. ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். பந்து பேட்டில் சரியாக படாததால் மிட்ஆஃப் திசையில் சென்றது. அதில் இரண்டு ரன்கள் கிடைத்தது. சிக்ஸருக்குத்தான் முயற்சி செய்தார். ஆனால், இரண்டு ரன்களே கிடைத்தது.

    அடுத்த பந்தை மீண்டும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசினார் டேரன் பிராவோ. பொல்லார்டு ஒரே ஓவரில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அடுத்த 24 பந்தில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 53 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் மெக்கல்லம் மற்றும் டேரன் பிராவோ அதிரடியால் 212-ஐ சேஸிங் செய்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 9-வது ஆட்டம் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் அந்த்ரே பிளெட்சர், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிளெட்சர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் ரஹீம் கார்ன்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கார்ன்வால் 29 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


    கார்ன்வால்

    3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் கேப்டன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் 72 ரன்னும், பொல்லார்டு 23 பந்தில் 65 ரன்னும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க செயின்ட் லூசியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. பிரெண்டன் மெக்கல்லம் 42 பந்தில் 68 ரன்களும், டேரன் பிராவோ அவுட்டாகாமல் 36 பந்தில் 94 ரன்களும் விளாச 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
    ×