என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    4-வது டெஸ்டில் ரிஷப் பண்டை களமிறக்க வேண்டாம்- ரவி சாஸ்திரி
    X

    4-வது டெஸ்டில் ரிஷப் பண்டை களமிறக்க வேண்டாம்- ரவி சாஸ்திரி

    • விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம்.
    • அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம்.

    இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் கைவிரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாமல் இருந்தார். ஆனாலும் வலியை தாங்கிக் கொண்டு இரண்டு இன்னிங்ஸ்சிலும் பேட்டிங் செய்திருந்தார்.

    அதனால் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 23-ஆம் தேதி தொடங்க இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் ரிஷப் பண்டை முழுநேர பேட்ஸ்மேனாக டெஸ்ட் அணியில் சேர்க்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர் கூறுகையில்:-

    ரிஷப் பண்டை நான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனாக மைதானத்தில் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடும் பட்சத்தில் களத்தில் நின்று பீல்டிங்கும் செய்ய வேண்டி இருக்கும்.

    அப்படி அவர் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அவருடைய காயம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். அவர் விக்கெட் கீப்பராக இருக்கும் பட்சத்தில் கிளவுஸ் அவரது விரல்களை பாதுகாக்கும். ஆனால் கிளவுஸ் இன்றி அவர் மைதானத்தில் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அது அவருடைய காயத்தை மேலும் மோசப்படுத்தும்.

    எனவே அடுத்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம். அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம்.

    என்று ரவி சாஸ்திரி கூறினார்.

    Next Story
    ×