என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உகாண்டா"
- 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழந்து உயிரிழந்தார்
- ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்து நாடு திரும்பிய ரெபேக்கா கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்தார்.
வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது முன்னாள் காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் இருந்த நிலத்தகராறு காரணமாக வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் வீராங்கனை ரெபேக்காவின் உடல் நேற்றைய தினம் கென்யாவில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கென்ய நாட்டின் எல்லையில் உள்ள நகரத்தில் நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் உகாண்டாவை சேர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ரேபாகாவின் காதலிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.
The funeral ceremony to lay Ugandan Olympic marathon runner, Rebecca Cheptegei, to rest in her hometown of Bukwo, started Saturday morning. https://t.co/FxsukO8D3t pic.twitter.com/Cckt0qXJuK
— Voice of America (@VOANews) September 14, 2024
- 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.
- பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார்
உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.
கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார். இதன்பின் கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை உகாண்டா அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய உகாண்டா அணி நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு ஆள் அவுட்டானது. உகாண்டா அணியில் 4 வீரர்கள் டக் அவுட்டும் அதில் 3 பேர் கோல்டன் டக் அவுட்டும் ஆனார்கள்.
41 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 5.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இத்தொடரின் தனது முதல் வெற்றியை நியூசிலாந்து அணி இன்று பதிவு செய்துள்ளது
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் உகாண்டா 39 ரன்களில் ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
கயானா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கயானாவில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 44 ரன்னும், ரசல் 130 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், உகாண்டா அணி 12 ஓவரில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய அகேல் ஹொசைனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
- 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
- 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
கயானா:
9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கயானாவில் இன்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா பந்து வீச்சை தேர்வு செய்தார். உகாண்டா வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவரில் 77 ரன்னில் சுருண்டது.
அல்பேஷ் ராம்ஜானி, காஸ்மாஸ் , ஜூமா மியாகி, பிராங்க் நசுபுகா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய உகாண்டா அணி 78 ரன் இலக்கை 7 விக்கெட்டை இழந்து தான் எடுத்தது. அந்த அணி 18.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரியாசத் அலி 33 ரன் எடுத்தார். அலைனோ, நார்மன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
20 ஓவர் உலக கோப்பையில் உகாண்டாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 125 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
உகாண்டா 3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசை 9-ந் தேதி எதிர்கொள்கிறது.
பப்புவா நியூகினியாவுக்கு தொடர்ந்து 2-வது தோல்வி ஏற்பட்டது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 5 விக்கெட்டில் தோற்று இருந்தது. 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 14-ந் தேதி சந்திக்கிறது.
- டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது.
- இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் 76 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
இதன் மூலம் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார். உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக காஸ்மாஸ் கியூட்டா மற்றும் மாசாபா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காசாவில் தற்போது நிலவிவரும், மோதல்களைப் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும், அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் வாழவேண்டும். அதே வேளையில், இரு நாடுகளிலும் அமைதி நிலவுவதற்கான தீர்வை நாம் தேட வேண்டும். நமது கூட்டு முயற்சியின் மூலம் சுமூகமான தீர்வு எட்ட வேண்டும்" எனக் கூறினார்.
- 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
- ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
One for the history books ✍️
— FanCode (@FanCode) November 30, 2023
Uganda are going to their first-ever ICC World Cup! They qualify for the 2024 T20 World Cup along with Namibia. ???
.
.#T20WorldCup2024 pic.twitter.com/M4kZVhEhU6
இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது.
- பிள்ளைகளில் பெரும்பாலானவர்களின் பெயர்கள்கூட அவருக்கு நினைவில் இல்லை.
- அடிப்படை தேவைகள் கிடைக்காததால் இரண்டு மனைவிகள் அவரை விட்டுச் சென்றுவிட்டனர்.
திருமணம் செய்து ஒன்றிரண்டு பிள்ளைகளை பெற்று வளர்ப்பதற்கே அல்லாடும் இந்த காலகட்டத்தில், உகாண்டாவைச் சேர்ந்த ஒருவர் 12 திருமணம் செய்துகொண்டு ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கியிருக்கிறார்.
உகாண்டாவின் புடாலேஜா மாவட்டம் புகிசா கிராமத்தைச் சேர்ந்தவர் மூசா ஹசஹ்யா கசேரா (வயது 68). இவர் ஒன்றல்ல, இரண்டல்ல.. 12 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களின் மூலம் 102 பிள்ளைகள் மற்றும் 578 பேரப்பிள்ளைகள் என ஒரு பெரிய பட்டாளமே உள்ளது. இந்த பிள்ளைகளில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக் கூட மூசாவால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.
உணவு, கல்வி, உடுத்த உடை போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காத அதிருப்தியில், இரண்டு மனைவிகள் மட்டும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். பண்ணை வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக 3 மனைவிகள் அருகில் உள்ள ஊரில் வசிக்கின்றனர். மற்றவர்கள் அவருடன் வாழ்ந்து வருகின்றனர்.
குடும்ப பாரம்பரியத்தை விரிவுபடுத்துவதற்கு பல பெண்களை திருமணம் செய்து, பல குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி அவரது சகோதரர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறி உசுப்பேற்றியிருக்கிறார்கள். இதனால் அடுத்தடுத்து திருமணம் செய்து பிள்ளைச் செல்வத்தை குவித்த மூசாவுக்கு, இப்போது 'போதும் போதும்' என்றாகிவிட்டது. பிள்ளைகளை அவரால் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மேற்கொண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை தவிர்த்ததாக கூறுகிறார்.
உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் படுடா மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மலையில் இருந்து மண் சரிந்ததை அடுத்து பெரும்பாலன வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 கிராமத்தை சேர்ந்த பலரை காணவில்லை என்பதால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. #Ugandamudslides
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்