search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "athlete"

    • கவுசல்யா என்ற தடகள வீராங்கனைக்கு வழங்கினார்.
    • அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி முதி யோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டாக் கோருதல், விதவை உதவித் தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித் தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனு தவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 339 மனுக்களை பொதுமக்களிடமிருந்தும், 32 மனுக்களை மாற்றுத்திற னாளிகளிடம் இருந்தும் மொத்தம் 371 மனுக்களை பெற்றார்.

    மேலும் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் 30- ந் தேதி வரை உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக் வாண்டோ சாம்பியன்சிப் போட்டிகளில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சுதேஷ்னாவை மாவட்ட கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 5 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வறுமை யில் வாழும், தாகம் தீர்த்தபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கவுசல்யா என்ற தடகள வீராங்கனைக்கு தேவை யான விளையாட்டு உபகர ணங்கள், விளையாட்டு சீருடைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • செல்வ பிரபு கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.
    • ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    சென்னை:

    ஆசிய தடகள சம்மேளனத்தின் சிறந்த வீரராக (20 வயதுக்கு உட்பட்டோர்) தமிழகத்தை சேர்ந்த டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) வீரர் செல்வ பிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இந்த விருதை பெறும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

    மதுரையை சேர்ந்த 19 வயதான செல்வ பிரபு கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார். ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.

    ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வபிரபுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மென்மேலும் புதிய சாதனைகளை படைத்து தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபுக்கு பாராட்டுகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நடைபெற்றது.
    • பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நடைபெற்றது.

    பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.

    இதேப்போல் 10-ம் வகுப்பு மாணவி எஸ்.தீபிகா நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும், 9- வகுப்பு மாணவி நீவிகா தடை தாண்டும் ஓட்டம் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர்.

    இதில் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற ஆர்த்தி வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் சுப. கார்த்திகேயன், ஆசிரியர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, நீலகண்டன் மற்றும் பயிற்சியாளர் விக்னேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    தோகாவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து (30). தமிழகத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

    இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்டெராய்டு என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிகிறது. இவர் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    கோமதியின் 'பி' மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரியவந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற பதக்கமும் பறிபோகலாம். 

    ஆனால் இச்செய்தியை கோமதி தரப்பினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக, கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என தெரிவித்துள்ளார். 
    அமெரிக்காவின் மலைப்பகுதியில் சிங்கம் ஒன்று ஓட்டப்பந்தைய பயிற்சி மேற்கொண்ட வாலிபர் மீது பாய்ந்ததால், அதனை திரும்ப தாக்கிக் கொன்றார். தற்போது தனது அனுபவத்தை கூறியுள்ளார். #USmanKilledLion
    டென்வர்:

    அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி உள்ளது. இங்கு பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக மலை சிங்கங்கள் 4500 முதல் 5500 வரையிலான எண்ணிக்கையில் வசிக்கின்றன.  

    இந்நிலையில் கொலராடோ பகுதியில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி அன்று  காலை ஓட்டப்பந்தைய பயிற்சிக்காக டிராவிஸ் காஃப்மன்(31) ஓடிக்கொண்டிருந்தார். அப்போது ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்துள்ளார். திடீரென சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்தது. அது 80 பவுண்ட் எடை கொண்ட ராக்கி மலைப்பகுதியைச் சேர்ந்த மலைச்சிங்கம் ஆகும்.

    சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றும் தப்பிக்க இயலவில்லை. இதனால் தற்காப்பு கருதி வேறு வழியின்றி சிங்கத்துடன் போராடி அதனைக் கொன்றார். டிராவிஸின் முகம் மற்றும் கைகளில் அடையாளம் தெரியாத அளவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

    பின்னர் அவர் வனத்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

    நடந்த சம்பவம் குறித்து டிராவிஸ் முதல் முறையாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிங்கம் எனது மார்பில் ஏறி நின்றுக் கொண்டு கால்களில் உள்ள தன் கூரிய நகங்களை கொண்டு முகத்தில் கீறியது. என்னை காப்பற்றிக் கொள்ள சிங்கத்தினை தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் கடுமையாக தாக்க துவங்கியது. எனக்குள் இருந்த உயிர் பயம், சண்டையிட என்னை மேலும் தயார்படுத்தியது. பின்னர் அருகில் இருந்த பாறையில் சிங்கத்தை மோதினேன்.

    இதனையடுத்து சிங்கத்தை காலின் அடியில் போட்டு, கழுத்து பகுதியில் காலை வைத்து நெறித்தேன். இறுதியில் சிங்கம் இறந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக இந்த மலைச்சிங்கங்கள் அமைதியான குணநலன் கொண்டவை. கடந்த சில ஆண்டுகளாக இவை மக்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது என கொலராடோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விலங்குகளின் வாழ்விடங்களை நோக்கி மக்கள் குடிபெயர்வதாலும், அந்த பகுதிகளில் தொடர்ந்து நடமாடுவதாலும் மனிதர்களை விலங்குகள் தாக்குவதாக கூறுகின்றனர்.

    இந்த தாக்குதலுக்குப் பின்னர், லாரிமர் கவுன்டியின் இயற்கை வளத்துறையுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #USmanKilledLion
    ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் மேலும் பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsianGames2018

    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய 11-வது நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது. டிரிபிள் ஜம்பில் அர்பிந்தர்சிங்கும், ஹெப்படத்லானில் சுவப்ன பர்மனும் தங்கம் வென்றனர். 200 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த் வெள்ளியும் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையில் தமிழக வீரர் சரத்கமல்-மனிகா பத்ரா ஜோடிக்கு வெண்கலமும் கிடைத்தது.

    நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 54 பதக்கம் பெற்றுள்ளது.

    தடகள போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இதில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களுக்கான வட்டு எறிதல் பந்தயம் இந்திய நேரப்படி இன்று மாலை 5.10 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் சீமாபுனியா, குமாரி சந்தீப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இருவரும் பதக்கம் பெற்று தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சீமா புனியா கடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று இருந்தார். காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றுக் கொடுத்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 5.50 மணிக்கும், ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டம் 6.05 மணிக்கும் நடக்கிறது. இந்தியா சார்பில் சித்ரா உன்னிகிருஷ்ணன் மோனிகா சவுத்ரி மற்றும் மஞ்ஜித்சிங், ஜின்சன் ஜான்சன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

    மஞ்சித்சிங் தகுதி சுற்றில் முதலிடமும், ஜின்சன் 2-வது இடமும் பிடித்தனர். இதனால் இருவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இருவரும் 800 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் (தங்கம், வெள்ளி) பெற்றுக் கொடுத்து இருந்தனர்.

    5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் கோவிந்த் கலந்து கொள்கிறார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அவர் வெண்கல பதக்கம் பெற வேண்டியது. விதி முறை மீறலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்கம் பறிபோனது. இதனால் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலாவது பதக்கம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் 6.50 மணிக்கும், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் இரவு 7.15 மணிக்கும் நடக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணி பங்கேற்கிறது. தொடர் ஓட்டத்திலும் பதக் கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட களத்தில் இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி ஆக மொததம் 14 பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018

    ×