என் மலர்
நீங்கள் தேடியது "அசார் அலி"
- அசார் அலி ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
- அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி. இவர் பாகிஸ்தானின் தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகுழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 12 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் ஏழுதியுள்ளார். அவரது ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அசார் அலிக்கும் நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஷாஹீன்ஸ் (பாகிஸ்தான் A அணி) மற்றும் அண்டர்-19 கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்-க்கு திடீரென வழங்கப்பட்டது. இதனால் அசார் அலி ஏமாற்றம் அடைந்தார். இதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசார் அலி பாகிஸ்தான் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ODI கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபி வென்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது, தொடக்க வீரர் ரிச்சார்ட்ஸ் 98 ரன்களும், கேப்டன் அக்கர்மான் 103 ரன்களும் விளாச 84.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் சேர்த்து கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க பேட்ஸ்மேன்கள் இமாம்-உல்-ஹக் (23), பகர் சமான் (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷான் மன்சூட் 41 ரன்கள் சேர்த்தார். ஆனால் அசார் அலி (100), பாபர் ஆசம் (104) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

அசார் அலி
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
முதல் இன்னிங்சில் முன்னணி வீரர்களான அசார் அலி, பாபர் ஆசம் சதம் அடித்துள்ளதால், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அதிக அளவில் ரன்கள் குவித்துவிடலாம் என்ற பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரண்டில் (1998 மற்றும் 2007) மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 9 தோல்விகளையும், ஒரு டிராவையும் சந்தித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா தொடர் எளிதாக இருக்காது என்பதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் பயமின்றி விளையாட வேண்டும் என்று சக வீரர்களை அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘பவுன்ஸ், சீமிங் அதிக அளவில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு வீரரும் பயனமின்றி, பெரிய இதயத்தோடு வெற்றிக்காக விளையாட வேண்டும்.

ஷபிக் மற்றும் அசார் அலியிடம் இருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஸ்கோர் தேவை. அவர்கள் அதிக ஸ்கோர் அடிக்கக்கூடியவர்கள். ஆகவே, நாங்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டால், சிறந்த பந்து வீச்சை குழுவை கொண்ட நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவோம்.
முகமது அமிர் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அவர் டெஸ்ட் போட்டியில் முக்கியமான விக்கெட்டுக்களை எங்களுக்கு பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 272 ரன்கள் சேர்த்திருந்தது. கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கேன் வில்லியம்சன் 139 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இன்று 9 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் 126 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

கேன் வில்லியம்சன் - நிக்கோல்ஸ்
ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து 279 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் சுமார் 81 ஓவர்கள் இன்று விளையாட வேண்டும். கடைசி நாளில் 81 ஓவரில் 280 ரன்கள் எடுப்பது எளிதான காரியம் அல்ல. அதேவேளையில் கடைசி வரை விக்கெட் இழக்காமல் இருந்தால் டிரா செய்யலாம்.
பாகிஸ்தான் இந்த போட்டியில் தோற்றால் நியூசிலாந்து 2-1 எனத் தொடரை கைப்பற்றிவிடும். இதனால் பாகிஸ்தான் குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்து தொடரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வருகிறது.
74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன் உடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து 104 ஓவர்கள் விளையாடி 272 ரன்கள் சேர்த்துள்ளது.

தற்போது வரை 198 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை கூடுதலாக 100 ரன்களுக்கு மேல் அடித்து 300 ரன்கள் முன்னிலைப் பெற்றால் நியூசிலாந்து போட்டியை டிரா செய்யும், அல்லது வெற்றி பெறும். சதம் அடித்த கேன் வில்லியம்சன் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த பாகிஸ்தான் கனவை தகர்த்துள்ளார்.
முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த நியூசிலாந்து 249 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இதனால் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று மேலும் 11 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.

சோதி
4-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் அசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. அசாத் ஷபிக் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 155 ரன்னிற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.
ஒருபக்கம் விக்கெட் வீழந்தாலும் மறுமுனையில் அசார் அலி அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடினார். வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் 9-வது விக்கெட்டுக்கு வந்த ஹசன் அலி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 164 ரன்கள் எடுத்திருந்தது.

அசார் அலி - அசாத் ஷபிக்
வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டுக்க அசார் அலி உடன் முகமது அப்பாஸ் ஜோடி சேர்ந்தார். அப்பாஸை எதிர்முனையில் வைத்துக் கொண்டு அசார் அலி ஒவ்வொரு ரன்னாக எடுத்தார். 11 ஓவர்கள் தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்தார் அசார் அலி. இறுதியில் 65 ரன்கள் எடுத்த நிலையில் பட்டேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆக பாகிஸ்தான் 171 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் பரபரப்பாக சென்ற டெஸ்டில் நியூசிலாந்து 4 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. பட்டேல் சிறப்பாக பந்து வீசி ஐந்துவிக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்திய இறுதிப் போட்டியில் அசார் அலி இடம்பிடித்து 59 ரன்கள் அடித்தார். இதே சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 76 ரன்களும் எடுத்தவர் அசார் அலி.
இந்த ஆண்டு நியூசிலாந்து தொடருக்குப் பிறகே அசார் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டு இவருக்குப் பதிலாக இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டார்.
“நான் திடீரெனத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுக்கவனம் செலுத்த விரும்புகிறேன். ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அபாரமான ஆடி வருகின்றனர், ஆகவே என் தேவை இருக்காது.
ஆனால் நான் எந்த ஒரு கசப்பான எண்ணங்களுடனும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. இது என் சொந்த முடிவு, டெஸ்ட் போட்டிகளில் இதே ஆற்றல், திறமையுடன் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன்.

அடுத்த உலகக்கோப்பை மற்றும் வரவிருக்கும் தொடர்களுக்காக பாகிஸ்தான் அணி வெற்றிபெற ஒரு முன்னாள் கேப்டனாக வாழ்த்துகிறேன். சர்பிராஸ் அஹமது அணியை நன்றாகவே வழி நடத்துகிறார்.” என்றார்.
இதுவரை 53 போட்டிகள் ஆடிய அசார் அலி, 1845 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 36.90. இதில் 3 சதங்கள் 12 அரைசதங்கள் அடங்கும்.
இவரது கேப்டன் பொறுப்பிலா் பாகிஸ்தான், வங்காளதேசத்துக்கு எதிராக 0-3 என்று உதை வாங்கியது, அதன் பிறகே ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரென்ஷா சோமர்செட் அணியில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த தொடக்க வீரரான அசார் அலியை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சீசன் முடியும்வரை அசார் அலி சோமர்செட் அணிக்காக விளையாட இருக்கிறார்.






