என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கருத்து வேறுபாடு: 2 பதவியையும் ராஜினாமா செய்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்
- அசார் அலி ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
- அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி. இவர் பாகிஸ்தானின் தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகுழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 12 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் ஏழுதியுள்ளார். அவரது ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அசார் அலிக்கும் நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஷாஹீன்ஸ் (பாகிஸ்தான் A அணி) மற்றும் அண்டர்-19 கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்-க்கு திடீரென வழங்கப்பட்டது. இதனால் அசார் அலி ஏமாற்றம் அடைந்தார். இதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசார் அலி பாகிஸ்தான் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ODI கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபி வென்றது குறிப்பிடத்தக்கது.






