search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor Sold"

    • அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி பகுதிக்கு உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து 2 இணைப்பு சாலைகள் பிரிவு செல்கிறது. இந்த சாலைகளை மையமாகக்கொண்டு அரசு டாஸ்மாக் கடை மற்றும் 2 தனியார் மதுபான விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வருகின்ற போதை ஆசாமிகள் அந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான விற்பனை கூடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு வந்த ஆசாமி போதையில் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அசுத்தம் செய்ய முற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் மதுபான விற்பனை கூட மேலாளரை அணுகி விவரத்தை கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது தனியார் மதுபான விற்பனை கூடத்தில் பணிபுரியும் நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுபான கூடம் முன்பு குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களை மதுபான கூட ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    அத்துடன் அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன.
    • கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    மதுரை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அரசு கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த உத்தரவின் பேரில் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் அதன் அளவுக்கேற்ப விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. எனவே அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு 3 நாட்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான சுரேஷ், பொன்முத்துமாரி, சக்தி மோகன், சுப்ரமணியன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் மது மட்டுமல்ல அனைத்தும் கூடுதலாக வியாபாரம் ஆகிறது.
    • மது பழக்கத்தை தவிர்க்கவும், குறைக்க வேண்டும் என அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.

    ஈரோடு:

    கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் தேர் ஊர்தி வாகனம் தமிழகம் முழுவதும் வருகிறது. அதன்படி இன்று ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் முத்தமிழ் தேர் வாகனம் வந்தது. இதனை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்வது என்பது அவர்களது வேலை. அதில் எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் ஏ.வ வேலுவே தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு செய்யும் பணி தடைப்படாது.

    தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் மது மட்டுமல்ல அனைத்தும் கூடுதலாக வியாபாரம் ஆகிறது. இதை திட்டமிட்டு செய்யவில்லை. தானாக நடக்கிறது. இதை தடுப்பது கடினம். இதற்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. இதை தடுத்திட வேண்டும் என்று நினைக்க முடியாது. அந்த காலகட்டத்தில் அவர்களது சந்தோஷத்திற்காக குடிக்கிறார்கள்.

    மது பழக்கத்தை தவிர்க்கவும், குறைக்க வேண்டும் என அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். மதுவிற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம் கிடையாது.

    இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு தேவையான நடவடிக்கையை செய்து வருகிறோம். டெட்ரா பாக்கெட் பற்றி ஆய்வறிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். மது பழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிடமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொங்கலுக்கு மதுக்கடை குறைப்பது குறித்து அறிவிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, பொங்கலுக்கு பொங்கல் கொடுப்பீர்களா என்று கேட்டால் நன்றாக இருக்கும். மது கடைகள் குறைப்பது குறித்து சொல்லமுடியாது என்றார்.

    • மே மாதத்தில் பீர் விற்பனை ஓரளவு அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
    • கடும் வெயில் காரணமாக மது பிரியர்கள் ஹாட் வகை மதுக்களை அதிகம் விரும்பவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் மது விற்பனை வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது. சில மாதங்களாக மது விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.

    கடந்த ஆண்டு மதுவிற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் 13 சதவீதம் விற்பனை குறைந்தது. தொடர்ந்து விற்பனை குறைந்து வந்த நிலையில் மே மாதம் மட்டும் 55 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

    இதனால் முழுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பீர் விற்பனை 17 சதவீதம் குறைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த மாதம் பீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன் காரணமாக அதன் விற்பனை முந்தைய ஆண்டை விட குறைந்திருக்கலாம். ஆனால் மே மாதத்தில் பீர் விற்பனை ஓரளவு அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர்.

    மதுபான உற்பத்தி நிலையங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக மது விற்பனை பாதிக்கு மேல் குறைந்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது ஒருபுறம் இருக்க உயர் ரக மதுபான பார்களில் மதுவிற்பனை சரிவு ஏற்படவில்லை. அந்த இடங்களில் 15 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது.

    தட்டுப்பாடு காரணமாக பீர் வரத்து குறைந்ததால் அதன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடும் வெயில் காரணமாக மது பிரியர்கள் ஹாட் வகை மதுக்களை அதிகம் விரும்பவில்லை. இதுவும் மது விற்பனை சரிவுக்கு ஒரு காரணமாகும்.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

    • தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன.
    • சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை பல மடங்கு விற்பது வழக்கம். தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எதிர்பார்ப்பதை விட மது விற்பனை அதிகரிக்கிறது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதையடுத்து விற்பனை சற்று சரிந்தது. உயர், நடுத்தரம், குறைந்த ரகம் மதுபானங்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டதால் குறைந்த ரக மது பிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தற்போது நடுத்தர ரக மது பிரியர்களும் குறைந்த ரக மதுபானங்களுக்கு மாறியதால் கடைகளில் எப்போதும் தட்டுப்பாடாக உள்ளது.

    இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் வார இறுதி நாளில் வந்ததால் இந்த வருடம் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்துள்ளது. 31-ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின் உள்ளிட்ட அனைத்து மது வகைகளும் குவிக்கப்பட்டன.

    தற்போது ஒரு சில இடங்களில் பார்கள் இல்லாததால் சரக்கு பாட்டில்களை வாங்கி வெளியில் வந்து குடித்தனர். ஒருசிலர் டாஸ்மாக் கடை முன்பே குடித்தனர். பார்கள் உள்ள கடைகளில் இரவு 11 மணி வரை கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இரவு 10 மணிக்கு கடை மூடப்பட்டதால் மது பிரியர்கள் திண்டாடினார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் கிடைத்தன.

    புத்தாண்டு உற்சாகத்தில் பலர் கூடுதல் விலையை பெரிதாக எண்ணாமல் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மது அருந்துவதற்காக மொத்தமாகவும் கடைகளில் வாங்கி சென்றனர்.

    சென்னையில் போலீஸ் கெடுபிடி இந்த ஆண்டு கடுமையாக இருந்ததால் மதுபானங்களை அங்கு குடிப்பதற்கு பதிலாக வாங்கி சென்றனர்.

    இதனால் கடந்த ஆண்டை விட புத்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளது. 31 மற்றும் 1-ந்தேதி 2 நாட்களும் சேர்த்து சுமார் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 31-ந்தேதி மட்டும் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் கடந்த காலத்தை விட மது விற்பனை அதிகரித்துள்ளது.

    அனுமதி இல்லாமல் பல இடங்களில் பார்களும் நடந்தன. நேற்று புதிய ஆண்டிலும் மது பிரியர்கள் வழக்கம் போல் கடைகளிலும், வீடுகளிலும் தங்கள் நண்பர்களோடு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பண்ணை வீடுகள், ரிசார்ட், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட அனைத்திலும் புத்தாண்டு மது விற்பனை அமோகமாக இருந்தன.

    • பிராந்தி மற்றும் ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களை கட்டியது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். குறிப்பாக கடந்த 3 நாட்களில் விற்பனை அதிகமாக நடந்தது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 22-ந் தேதி ரூ.2 கோடியே 30 லட்சம், 23-ந் தேதி ரூ.3 கோடியே 25 லட்சம், தீபாவளியன்று ரூ.2 கோடியே 70 லட்சம் என 3 நாட்களில் ரூ.8 கோடியே 15 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. மேலும் பீர் வகைகளை விட பிராந்தி மற்றும் ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மது விற்பனையில் முதலிடம் பிடித்தது மதுரை.
    • சென்னையில் தீபாவளி அன்று மட்டும் ரூ.51.52 கோடிக்கு மது விற்பனையானது.

    கடந்த 22ம் தேதி சென்னையில் 38 கோடியே 64 லட்ச ரூபாய்க்கும், திருச்சியில் 41 கோடியே 36 லட்ச ரூபாய்க்கும், சேலத்தில் 40 கோடியே 82 லட்ச ரூபாய்க்கும், மதுரையில் 45 கோடியே 26 லட்ச ரூபாய்க்கும், கோவையில் 39 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

    நேற்று 23ந் தேதி மட்டும் சென்னையில் 51 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கும், திருச்சியில் 50 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 52 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும், மதுரையில் 55 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கும், கோவையில் 48 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது.

    கடந்தாண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இந்த ஆண்டு இதனை மிஞ்சும் வகையில் கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 

    • கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி இந்தியாவில் பீர் மற்றும் மதுபான வகைகளின் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
    • கொரோனாவுக்கு பிறகு வீடுகளில் இருந்து மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    மும்பை:

    கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அடுத்தடுத்து முழு முடக்கம் காரணமாக மது குடிப்பவர்களில் பெரும்பாலனவர்கள் அந்த பழக்கத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    முழு முடக்கம் நீங்கியபிறகும், மது குடிப்பவர்கள் எண்ணிக்கை உயரவில்லை. சுமார் 20 சதவீதம் பேர் மது போதையில் இருந்து விடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதுபோல மது பாட்டில்கள் விற்பனையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டது.

    கடந்த ஓராண்டு நடந்த ஆய்வின்படி இந்தியாவில் பீர் மற்றும் மதுபான வகைகளின் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு வீடுகளில் இருந்து மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    வரும் ஆண்டுகளில் மது விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சீர்காழியில் சொகுசு கார், ஆட்டோவில் மதுபானம் கடத்தி வந்தது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அர்ஜுனன், தில்லை நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் சீர்காழி பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சீர்காழி நோக்கி வந்த இனோவா சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 180 மில்லி அளவு கொண்ட புதுச்சேரி மாநில 140 மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த சட்டநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா (28), சீர்காழி தென்பாதி வவுசி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), தென்பாதி எம் ஆர் ராதா நகரைச் சேர்ந்த வினோத் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தப்பி ஓடிய திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த நபரை தேடி வருகின்றனர். இதேபோல் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் புதுச்சேரி மாநிலம் மதுபான பாட்டில்கள் 148 இருந்ததை கைப்பற்றி ஆட்டோவில் வந்த சீர்காழி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த சங்கர் (26) அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (68) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செம்போடை தெற்கு காடு செந்தில்குமார் (வயது 35) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் புதுச்சேரி எரிசாராயத்தை கைப்பற்றி செந்தில்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
    தேனி மாவட்டத்தில் மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
    தேனி

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள சிலர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வெளியே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    பெரியகுளம் போலீசார் பங்களாபட்டி பிரிவு அருகே ரோந்து சென்றபோது அங்கு மதுவிற்ற சரவணன் (வயது43) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேவதானப்பட்டி போலீசார் தெற்கு தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற சுப்புத்தாய் (வயது70) என்பவரை கைது செய்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேவாரம் போலீசார் மல்லிங்காபுரம் மேற்கு ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற மூணாண்டிபட்டியை சேர்ந்த சசி என்பவரை கைது செய்து 28 மதுபாட்டில்கள் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
    ×