என் மலர்
நீங்கள் தேடியது "people protest"
- கால்நடைகளை கொண்டு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- இன்று காலை பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கால்நடைகளை அவிழ்த்து கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 5-வது வார்டுக்கு உட்பட்ட ஊதங்காட்டுபுதூர் என்ற பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொடங்கியது.
இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
சாலை அமைக்கும் பணிக்காக இந்த பகுதியில் ஆங்காங்கே குழி தோண்டப்பட்டும், மண் குவியல் குவியலாக கொட்டப்பட்டு இருப்பதாலும் தங்கள் பகுதிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இதையடுத்து கால்நடைகளை கொண்டு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கோபம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடு, மாடு, வளர்ப்பு நாய்களுடன் அரச்சலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று இரவு 8 மணி அளவில் வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளை பேரூராட்சி அலுவலகம் முன்பு கட்டி போட்டு முற்றுகை போராட்டம் செய்தனர். இதுபற்றி தெரியவந்ததும் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் விடிய, விடிய முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை அரச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் செல்ல வழி ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டது. மேலும் விரைவாக தார்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 8 மணி அளவில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கால்நடைகளை அவிழ்த்து கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனம் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தனர்.
- சாலை மறியல் காரணமாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்நிலைப் பகுதியில் உள்ள மன்னவனூர் ஊராட்சியை சேர்ந்த கைகாட்டி, கண்ணன்புரம் போன்ற பல்வேறு பகுதி களில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் கைகாட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனம் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் வரும் வழியில் மரம் விழுந்ததால் உடைப்பு ஏற்பட்டுள்ள தாகவும் இதனை சீரமைக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும், ஒருசில இடங்களில் பழைய குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், புதிய குடிநீர் குழாய் அமைக்க அரசிடம் நிதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனிடையே சாலை மறியல் காரணமாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
- குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்
- மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-செந்துறை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் தனியார் மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்து செல்லும் இடத்தில் மதுபானக்கடை வைத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே செட்டியார்குளம், அம்மன்குளம், பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த நேரிடும் என்றும் மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
- பழனி நகராட்சி குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
- எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர்.
பழனி:
பழனி நகராட்சியில் 1வது வார்டுக்கு உட்பட்ட பெரியப்பா நகர் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைய டுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்ட னர்.
அப்போது பழனி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மீட்டிங்கில் இருப்பதாகவும், பிறகு வருமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து அதிகாரிகளை சந்தித்து விட்டுதான் செல்வோம் என்று கூறி பழனி நகராட்சி அலுவலக வாயிலிலேயே காத்திருந்த னர்.
நீண்ட நேரம் ஆகியும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்க மறுத்ததாக கூறி ஆவேச மடைந்த பொதுமக்கள், நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தெரிவித்ததாவது:-
பழனி பெரியப்பா நகரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் தற்போது 5ஜி அலைக்கற்றைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. குடியிரு ப்புகள் மட்டுமின்றி மருத்து வமனை, அங்கன்வாடி உள்ளிட்டவை உள்ள பகுதியில் அமைக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ள நிலையில் அதை மீறி டவர் அமைக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் கதீர்வீச்சு காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட பலரும் பாதிக்கப்படுவர்.
மேலும் தற்போது அமை க்கப்படும் கோபுரமானது முதல் முப்பது அடி உயரத்திற்கு மட்டுமே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரம்பம் முதலே பலமுறை தங்களது எதிர்ப்பை தெரிவித்தும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே செல்போன் டவர் அமை க்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்ததாக கூறினர்.
தங்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்தால் விரைவில் கடுமையான போராட்டத்தில் ஈடு படப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை சந்திக்க வைப்பதாக கூறியதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
- பொங்கல் விழா கொண்டா டிய போது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
- சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் வைகை அணை போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே வைகைஅணை முதலக்க ம்பட்டி இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் அஜித்குமார்(29). இவருக்கும் கர்ணன் மற்றும் பால முருகன் ஆகியோரிடையே பொங்கல் விழா கொண்டா டிய போது தகராறு ஏற்பட்டது.
இதில் அவர்கள் 2 பேரும் தன்னை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக போலீசில் புகார் அளித்தார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் வைகை அணை போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் அஜித்குமாரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்து கர்ணனை கைது செய்தனர்.
- சுற்றுலா பஸ்சை குறிப்பிட்ட அனுப்பாததால் கோவிலுக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
- சுற்றுலா பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ள பொம்மனாங்கோட்டை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்ேடார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
கடந்த 20-ந்தேதி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 சுற்றுலா பஸ்களை வாடகைக்கு பேசிஇருந்தனர். இதற்காக பாதி பணத்தை அட்வான்சாக பெற்றுக்கொண்ட சுற்றுலா நிறுவனம் சம்பவத்தன்று குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை அனுப்பாமல் இருந்துள்ளனர்.
மேலும் மற்றொரு சுற்றுலா பஸ்சை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி உள்ளனர். இதனால் கோவிலுக்கு செல்லமுடியாமல் அவர்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று அவ்வழியாக வந்த அதேசுற்றுலா பஸ்சை அப்பகுதி பெண்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ் உரிமையாளர் இங்கு வந்தால்தான் இந்த பஸ்சை விடுவிப்போம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டடது. போலீசார் பலமுறை தெரிவித்தும் அவர்களுடன் வாக்குவாதத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது.
- குடியிருப்பு பகுதியில் தனி நபர்ஒருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி அமைக்க கட்டிடப் பணிகளை செய்து வருகிறார்
- அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு நுழைவுவாயில் சோணை கருப்பசாமி கோவில் பின்புறம் குடியிருப்பு பகுதியில் தனி நபர்ஒருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி அமைக்க கட்டிடப் பணிகளை செய்து வருகிறார்.
இதனால் குடிநீர் மற்றும் காற்று மாசுபட்டு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனிஅமைக்க ஏற்பாடு செய்து வருபவர் மாசு ஏற்படாத வண்ணம் வேறு தொழில் தொடங்கட்டும். குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். எனவே வேறு பகுதியில் இதனை அமைக்க வேண்டும்.
இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் அப்பகுதி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.
- தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து ஆலை அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
பழனி அருகே உள்ள தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து ஆலை அமைக்க கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகே உள்ள தாதநாய க்கன்பட்டி கிராமப்பகுதியில் வெடிமருந்து ஆலை அமைக்க தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம், சித்திரை க்குளம், தாதநாயக்கன்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய த்தின் மூலம் வெடிமருந்து ஆலை அமைப்பது தொட ர்பான கருத்துகேட்பு கூட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் மண்டப த்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிைல வகித்தனர். கூட்டத்தில் பாப்பம்பட்டி, தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்ேவறு கிராமமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர், இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆலை அமைப்பது தொடர்பாக கிராமமக்களி டம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது கிராமமக்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்டடோர் ஆலை அமைய உள்ள இடத்திற்கு அருகே உள்ள பழமை வாய்ந்த ஐவர் மலை, கோவில்கள் மற்றும் விவசாய நிலம் ஆகியவை உள்ளது. இங்கு வெடிமருந்து தயாரிப்பு ஆலை அமை ந்தால் நிலம், நீர், காற்று மாசடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே ஆலை அமைக்க கூடாது என அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆலை அமைய எதிர்ப்பு தெரிவித்து மனுக்களையும் அளித்தனர்.
- விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம்.
- விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட கோரி கிராம மக்கள் போராட்டம்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்தது. பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா எனவும், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கூறி முழக்கமிட்டனர்.
- வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில்20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார்.
- ஆக்கிரமிப்பை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில்20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் தாசில்தார் சக்திவேலன் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
மேலும் கிராம மக்கள் உடன் சேர்ந்து வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.