என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பயணம்"

    • சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
    • ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிக்கான டிக்கெட்டை வைத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

    நேற்றைய தினம், ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிக்களுக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளது

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல்2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    இந்தமுயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் CSKபோட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ இரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன்,பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும்.

    கூடுதலாக, ஸ்பான்சர்செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ இரயில்நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோஇரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

    விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டிமுடிந்த பிறகு மெட்ரோ இரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும்.

    ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ இரயில் புறப்படும் நேரம்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும்.

    பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்ய சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • 11.64 கோடி பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து உள்ளனர்.

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மகளிர், உயர் கல்வி படிக்கும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்ய சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்தில் இந்த திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அன்று முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை 11.64 கோடி பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து உள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் 5.75 லட்சம் பேர், அவர்களின் உதவியாளர்கள் 32 ஆயிரம் பேர், திருநங்ைககள் 66 ஆயிரம் பேர் என ெமாத்தம் 11.64 கோடி பேர் பயணம் செய்து உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.  

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர்.
    • திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களை செயல்படுத்து வதற்கு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு நிதிசுமை குறைந்து பயனடைவார்கள்.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்பவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 6 டெப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. டவுன் பஸ்கள் ஏறத்தாழ 120 வழித்தடங்களிலும், புறநகர் பஸ்கள் 200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 3 கோடி 36 லட்சத்து 52 ஆயிரத்து 835 பெண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாற்றுத்திறனாளிகள், 10 ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள், 12 ஆயிரத்து 767 மூன்றாம் பாலினர்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெண்கள் இத்திட்டத்தின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

    அதே போல, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அய்யன் திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத் தெரிவித்துள்ளார்.

    • போலி அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்சில் ஓராண்டாக இலவச பயணம் செய்தார்.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அரசு விரைவு பேருந்து டிக்கெட் பரிசோதகர் ராமகி ருஷ்ணன் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    திருமங்கலம் அப்பக்க ரையிலிருந்து இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் ராமகிருஷ்ணன் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது பஸ்சில் இருந்த 52 வயதுடைய நபர் தான் தேனி மாவட்டத்தில் கண்டக்டராக வேலை பார்ப்பதாகவும், எனவே டிக்கெட் எடுக்கவில்லை எனக்கூறி அடையாள அட்டையை காண்பி த்துள்ளார்.

    அதனை பார்த்த ராம கிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போலி அடையாள அட்டையை காண்பித்து இலவச பயணம் செய்தது மதுரை திருநகர் முல்லை நகரை சேர்ந்த பாண்டித்துரை எனவும், இவர் அப்பக்கரையில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் கடந்த ஓராண்டாக அரசு பஸ்சில் மோசடி செய்து இலவச பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
    • இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார்.
    • முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும் என்றார் ராகுல் காந்தி.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார். நாங்கள் உங்களுக்கு (மக்களுக்கு) ஏற்கனவே நான்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் நாளில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

    மோடி அவர்களே, நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்று சொன்னீர்கள். நான் அதில் மேலும் ஒன்றை சேர்க்கிறேன். முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும். கர்நாடகம் முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • வரும் 11-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

    அதன்படி, வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    மேலும், ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    • அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை இன்று முதல் மந்திரி தொடங்கி வைத்தார்.
    • ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

    இந்நிலையில், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சக்தி திட்டத்தை முதல் மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

    கர்நாடகத்திற்குள் மட்டுமே இந்த இலவச பயணம் மேற்கொள்ள முடியும். கர்நாடகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலெக்டர் உத்தரவு
    • பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும் என அறிவுரை

    வேலூர்:

    வேலூர் முஸ்லிம் அரசு பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    பள்ளிகள் திறக்கப்பட்ட இன்று புத்தாண்டாக கருதி மாணவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும்.

    மாணவர்கள் ஒரு குறிக்கோளை வைத்து படிக்க வேண்டும். மாணவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை சரிவர கவனிக்காதது தான் தோல்விக்கு காரணம்.

    மாணவர்கள் ஒவ்வொரு வரும் தினமும் இரண்டு நிமிடம் ஒதுக்கி மனசாட்சி படி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    100-க்கு 100 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது இல்லை நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.

    10 ஆண்டுகள் கழித்து நாம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை இப்போது தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்க ளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

    மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், பொது அறிவு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை இன்று வகுப்புகள் தொடங்கியது. 4 லட்சத்து 44 ஆயிரம் பாட புத்தகங்கள், 99 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்கள் சிரமம் அடைந்து வந்ததாக புகார் வந்தது.

    மாணவர்கள் சீருடை அணிந்து வந்தாலே அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென போக்குவரத்து துறை பொது மேலாளருக்கு அறிவுறுத்தி உள்ளோம். இன்னும் 10 நாட்களில் மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்து தரப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • நாளுக்கு நாள் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 13-ந் தேதி (நேற்று முன்தினம்) மாநிலம் முழுவதும் 51.52 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்திருந்தார்கள். இதன்மூலம் பெங்களூரு பி.எம்.டி.சி. கே.எஸ்.ஆர்.டி.சி உள்பட 4 போக்குவரத்து கழகங்களுக்கும் ரூ.10 கோடியே 82 லட்சத்து 2 ஆயிரத்து 191 செலவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் நாளுக்கு நாள் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏராளமான பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.
    • பர்தா அணிந்து இலவசமாக பஸ்சில் பயணித்து, பெங்களூரு வழியாக தார்வாருக்கு வந்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிப்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்தை கடந்த ஜூன் 11-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் ஏராளமான பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், தர்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா சம்சி பஸ் நிலையத்தில் நேற்று காலை, பர்தா அணிந்த ஒரு பெண் அமர்ந்திருந்தார்.

    அவரது உருவ அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்தன. இதையடுத்து, சில பெண்கள் அவர் அருகே சென்று, பர்தாவை நீக்கி முகத்தை காண்பிக்கும் படி கூறினார். இதற்கு அவர் மறுத்தார்.

    சில பெண்கள் வலுக்கட்டாயமாக அவரது பர்தாவை விலக்கியபோது, அவர் பெண்ணல்ல, ஆண் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இலவசமாக பஸ்சில் பயணிப்பதற்காக, பர்தா அணிந்து வந்ததாக அந்த நபர் கூறினார்.

    இதையடுத்து, அந்த பெண்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கோடகேரியைச் சேர்ந்த வீரபத்ரையா நிங்கய்ய (வயது 40) என்பது தெரிந்தது. பர்தா அணிந்து இலவசமாக பஸ்சில் பயணித்து, பெங்களூரு வழியாக தார்வாருக்கு வந்துள்ளார்.

    ஆனால், அவரிடம் பெண் புகைப்படத்துடன் கூடிய ஆதார் கார்டு நகல் இருந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் இலவச பயணத்துக்காக பர்தா அணிந்து வந்தாரா? அல்லது பஸ்சில் பெண்களிடம் நகை பறிக்கும் நோக்கத்தில் மாறுவேடத்தில் வந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    ×