என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 413 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா..!
- பெத் மூனி 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 68 ரன்களும் அடித்தனர்.
- இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி 8.5 ஓவரில் 86 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பெத் மூனி 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 68 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி 8.5 ஓவரில் 86 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ரேனுகா சிங் 9 ஓவரில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரதிகா ராவல் 10 ரன்னில் வெளியேறினார்.
Next Story






