search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம்- ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நம்பிக்கை
    X

    இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம்- ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நம்பிக்கை

    • இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார்.
    • கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை 2 - 0 (3) என்ற கணக்கில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பை ஆஸ்திரேலியா 90% உறுதி செய்துள்ளது.

    இந்நிலையில் தென்னாபிரிக்காவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் உள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முயற்சிக்கவுள்ளது.

    சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா 2012-க்குப்பின் கடந்த 10 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை.

    இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் விளையாடிய அனுபவம் தற்போதுள்ள ஃபார்ம் ஆகியவற்றை பயன்படுத்தி இம்முறை நிச்சயமாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    இது பற்றி அத்தொடரில் வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு:-

    நாம் எப்போதும் இருக்கப் போவதைப் போலவே எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்த கோடைகாலம் நமக்கு அற்புதமாகவே அமைந்தது. மேலும் இந்த வெற்றியால் நாங்கள் சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொள்ளும் திறமையை பெற்றுள்ளோம் என்று உணர்கிறேன்.

    அத்துடன் கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது உண்மையிலேயே இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு நாங்கள் ஒண்ணும் கண்ணை மூடிக்கொண்டு போகப் போவதில்லை. குறிப்பாக அடுத்த 12 மாதங்களில் எப்படி விளையாட பார்க்கிறோம் என்பதை பிரதிபலிக்க அடுத்த சில வாரங்களில் தேவையான முடிவுகளையும் புத்துணர்ச்சிகளையும் எடுக்க உள்ளோம்.

    மேலும் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார். அவரை மேற்கொண்டும் சோதித்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இத்தொடரில் 800 ரன்கள் அடித்த போதும் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    அவரைப் போன்றவருக்கு அது எளிதல்ல என்றாலும் அவர் தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அங்கு (இந்தியாவில்) மைதானங்கள் சற்று வெடிப்பாகவும் மற்றும் அதிகமாக சுழலும் என்று நம்புகிறேன். அதே சமயம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்காத பிட்ச்களும் இருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×