என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2025: தரையில் உரசிய பேட்... அவுட் கொடுத்த அம்பயர்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரியான் பராக்
    X

    IPL 2025: தரையில் உரசிய பேட்... அவுட் கொடுத்த அம்பயர்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரியான் பராக்

    • குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
    • இப்போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இப்போட்டியில் அட்டமிழந்த ரியான் பராக் நடுவரிடம் கோவப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் பொது 7வது ஓவரை குல்வந்த் கெஜ்ரோலியா வீசினார்.

    அப்போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தைத் பராக் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு கீப்பரில் கைகளுக்கு சென்றதாக கூறி நடுவர் அவுட் கொடுத்தார்.

    உடனடியாக பராக் மேல்முறையீடு செய்தார். அப்போது பந்து பேட்டின் பக்கத்தில் வரும்போது பேட் தரையில் உரசியது தெரியவந்தது. ஆனால் பேட் தரையில் உரசுவதற்கு முன்பே பந்து பேட்டில் பட்டதாக கூறி மூன்றாம் நடுவரும் அவுட் கொடுத்தார்.

    இதனால் கோபமடைந்த பராக் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    Next Story
    ×