என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசி சாதனை படைத்த ரியான் பராக்
    X

    ஐபிஎல் 2025: ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசி சாதனை படைத்த ரியான் பராக்

    • ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் அதிகபட்சமாக 95 ரன் எடுத்தார்.

    கொல்கத்தா:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    கொல்கத்தாவில் நேற்று நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். இதன்மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றிலும் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் இணைந்துள்ளார்.

    ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ராகுல் தெவாட்டியா, ரவீந்திர ஜடேஜா, ரிங்கு சிங் ஆகியோரும் அடங்குவர்.

    Next Story
    ×