என் மலர்tooltip icon

    விளையாட்டு

    IPL 2025: ஆறுதல் வெற்றி பெறுவது யார்? ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்
    X

    IPL 2025: ஆறுதல் வெற்றி பெறுவது யார்? ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

    • முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.
    • நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லை என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணி முந்தைய இரு ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தது. கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

    நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லை என 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட அந்த அணி வெற்றியுடன் விடைபெற ஆர்வம் காட்டும். ஆறுதல் வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் யார்? கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    Next Story
    ×